இயந்திர மனித பயன்பாட்டை அதிகரிக்க $60 மில்லியன் நிதி

இயந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) துறையை மேம்படுத்தவும் தயாரிப்பு, தளவாடத்துறை,சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் அதிக நிறுவனங்களை இயந்திர மனிதக் கருவி பயன்பாட்டை அதிகரிக்கவும் தேசிய இயந்திர மனிதவியல் திட்டத்தில் (என்ஆர்பி) $60 மில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது.

என்ஆர்பி, சிங்கப்பூரில் இயந்திர மனிதக் கருவியின் ஆய்வு மேம்பாட்டை மேற்பார்வையிடும் தேசிய அமைப்பு. தேசிய ஆய்வு அறக்கட்டளையில் (என்ஆர்எஃப்) நிதியாதரவில் செயல்படும் இவ்வமைப்பை அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு (ஏ ஸ்டார்) நடத்துகிறது.

மார்ச் மாதத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது முதலில் அறிவிக்கப்பட்ட இந்த முதலீடு, வளர்ந்து வரும் உலகளாவிய இயந்திர மனிதக்கருவி சந்தையில் சிங்கப்பூரும் பயனடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டது. தற்போது 50 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட இச்சந்தை 2028ஆம் ஆண்டு வாக்கில் 60 பில்லியன் டாலர்களைத் தாண்டி வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு, பங்காளித்துவச் செயல்பாடுகள் மூலம் இங்கு இயந்திர மனிதக் கருவிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக வர்த்தக,தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறினார்.

சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட இயந்திர மனிதக்கருவி நிறுவனமான லயன்ஸ்போட்டின் புதிய கிராஞ்சி தொழிற்சாலையை வியாழக்கிழமை (ஏப்ரல் 18) திறந்து வைத்து அவர் பேசினார்.

தரையை சுத்தம் செய்யும் இயந்திர மனிதக் கருவிகளுக்கு இந்நிறுவனம் பெயர் பெற்றது.

$60 மில்லியன் நிதி ரோபோகிளஸ்டர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். இது, தொழில்துறைகளுடன் என்ஆர்பி செயல்படுவதற்கான ஆய்வு மேம்பாட்டு பங்காளித்துவதத் தளமாகும். அதன் ஆய்வாளர்கள், நிபுணர்கள் ஆதரவுடன் கருத்தரங்குகள், பயிலரங்குகள், மற்ற வசதிகளையும் வசதி நிர்வாகத் துறையில் தொடங்குவர். விரைவில் சுகாதாரப் பராமரிப்பு, தளவாடங்கள், இதர துறைகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றார் திரு டான்.

“ரோபோகிளஸ்டர் திட்டங்கள் வலுவான பங்காளித்துவத்தை ஊக்கப்படுத்துவதையும் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஆய்வு, மேம்பாட்டை தொழில்முனைப்பாக்குவது,” என்றார் திரு டான்.

“பல சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இயந்திர மனிதக்கருவியில் ஆர்வம் காட்டலாம். ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாமல் இருக்கலாம்,” என்ற அவர், “விவாதிக்கப்பட விஷயங்களில் இதுவும் ஒன்று,” என்றார்.

2016ல் தொடங்கப்பட்ட என்ஆர்பி தொடக்கத்தில் இயந்திர மனிதக் கருவியில் கவனம் செலுத்தியது. தற்போது பரந்த அளவிலான பயனாளர்களுக்கு பொருத்தமான தரப்படுத்தப்பட்ட இயந்திரங்களுக்கான ஆய்வு, மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

மனித இயந்திரக் கருவி திட்டத்திற்கு தேசிய இயந்திர மனிதக் கருவியில் திட்டம் வழங்கியுள்ள $450 மில்லியனுடன் இந்த $60 மில்லியன் முதலீடு கூடுதலாக இடம்பெறுகிறது.

லயன்ஸ்போட்

லயன்ஸ்போட்டின் $12 மில்லியன் கிராஞ்சி தொழிற்சாலை, சாங்கியில் உள்ள அதன் பழைய வசதியைவிட நான்கு மடங்கு உற்பத்தியைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் 5,000 சதுர மீட்டர் பரப்பளவு, அதாவது ஒரு காற்பந்துத் திடல் அளவைக் கொண்ட ஆகப் பெரிய துப்புரவு இயந்திர மனிதக்கருவி தொழிற்சாலை இது என்று அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், 2018ஆம் ஆண்டு முதல் 2,500க்கும் மேற்பட்ட இயந்திர மனிதக்கருவிகளை விற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!