ஒருங்கிணைந்த மையத்தில் பிரிக்கப்பட்ட அஞ்சல் வாக்குகள் 39 தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன

திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையத்தில் இருந்து அஞ்சல் வாக்குகளை தொகுதிவாரியாகப் பிரித்து அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.

இம்முறை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 93,642 வாக்குள் பதிவாகி உள்ளன. அந்த வாக்குகளை தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்புவதற்கான ஒருங்கிணைந்த மையம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த மையம் தற்காலிகமாக அமைக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளுக்காக செலுத்தப்பட்ட அனைத்து அஞ்சல் வாக்குகளும் திருச்சி மையத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்தந்த தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்றும் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி இந்த வாக்குகள் பின்னர் எண்ணப்படும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில் 5,445 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அத்தொகுதியில் 239 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!