நாற்பதும் நமதே: மு.க. ஸ்டாலின்

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை நடைபெற்ற கடைசி பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று சூளுரைத்துள்ளார்.

இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்காக பிரசாரம் செய்து அவர் வாக்கு சேகரித்தார்.

தமது பேச்சில் பாஜகவையும் அதிமுகவையும் அவர் கடுமையாகச் சாடினார்.

“நாற்பதுக்கும் நாற்பது, நாம்தாம் வெல்லப் போகிறோம். நாற்பதிலும் நமது கூட்டணிதான் ஆளப் போகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

“இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை, ஒற்றுமையாக வாழ்கிற மக்களிடையே பிளவை உருவாக்கும் மதவாதப் பேச்சு, எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிற பாசிச எண்ணம். எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்திருக்கிறார்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறார்கள்.

“மக்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட்காரர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என்று சிந்தித்து திட்டங்களை தீட்டுவதால் விலைவாசி உயர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இன்றைக்கு உயர்ந்து இருக்கிறது.

“ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று வாக்குறுதி தந்து ஆட்சி அமைத்த மோடி, இந்த பத்து ஆண்டுகளில் இருபது கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தாரா, இல்லை, இந்தக் கேள்வியை கேட்டதற்கு ‘பகோடா’ சுடச் சொன்னவருதான் மோடி,” என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

அதிமுக கட்சி பற்றி பேசிய அவர், “யார்தான் உண்மையான எதிரி என்பது தெரியாமல், எதற்காக தேர்தலில் நிக்கிறோம் என்ற தெளிவும் இல்லாமல், பாஜவுக்கு ஆதாயம் தேடித்தரக்கூடிய களத்திற்கு வந்திருக்காரு பழனிசாமி, ஆட்சியில் இருந்தபோது செய்துகொண்ட கூட்டணியை இப்பவும் தொடர்கிறார், பாஜகவை எதிர்க்க துணிவு வேண்டும். முதுகெலும்பு வேண்டும். ரெண்டுமே பழனிசாமிகிட்ட கிடையாது. பழனிசாமியின் ஊழல் குடுமி பாஜக கையில் இருக்கிறது. அதிமுகவில் ஊழல் என்பது கன்னித்தீவு கதை மாதிரி நீண்டுகொண்டே போகிறது,” என்றார்.

”ஸ்டாலின் முதலமைச்சரா இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் அவர்களுடைய அண்ணன் தாய்வீட்டு சீர்கொடுத்த மாதிரி மாதம் மாதம் 1,000 ரூபாய் பெற்றுக் கொண்டார்கள். அதே மாதிரி முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின்பேரில் 16 லட்சம் குழந்தைகள் வயிராற சாப்பிட்டுவிட்டு போகிறார்கள். ஆட்சிக்கு வந்த அடுத்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் மகளிர் சுதந்திரமாக கட்டணமில்லா பயணம் செய்கிறார்கள், ஏழ்மையான சூழலில் அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு வந்த நாலு லட்சத்து 81,075 பெண் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்தோம். இப்படி இன்னும் பல திட்டங்கள் இடம்பெற நமக்கு ஏற்ற ஒன்றிய அரசு ஆட்சிக்கு வர வேண்டும்.

“திராவிட மாடல் அரசில் நம்முடைய சாதனைகள் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு தனி நபரையும் சென்றடைய பார்த்து பார்த்து செயலாற்றியிருக்கிறோம். மகளிர், மாணவர்கள், முதியோர், இளைஞர்கள், சிறுபான்மையினர் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் நம்முடைய திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம்.

“இந்தியாவின் வரலாறு தெற்கேயிருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இம்முறை இந்தியாவின் வெற்றிக் கணக்கை தமிழ்நாட்டில் தொடங்கி எழுத இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு அளியுங்கள் என உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வாக்கு பாசிசத்தை வீழ்த்தட்டும். இந்தியாவை காக்கட்டும். தமிழ்நாட்டை காக்கட்டும். எதிர்கால தலைமுறையை காக்கட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே,” என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!