புடாபெஸ்ட் விலங்கியல் தோட்டத்தில் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி

1 mins read
976c1f97-d11a-4b92-9215-0d68e634be56
சுறா மீன்களுக்குக் கிறிஸ்துமஸ் சிறப்புணவு. - படம்: இபிஏ

புடாபெஸ்ட்: கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி படர்ந்தோங்கும் காலகட்டத்தில் ஹங்கேரிய புடாபெஸ்ட் விலங்கியல்  தோட்டம், அங்குள்ள வட்டாரவாசிகளுக்குப் புதுமையான கொண்டாட்டத்தை வழங்குகிறது.

விலங்குகளின் உணர்வுகளை நல்ல விதமாகத் தட்டியெழுப்பி அவற்றை மகிழ்விக்கும் பல்வேறு நடவடிக்கைகளைக் காப்பாளர்கள் நடத்தியுள்ளனர். 

எடுத்துக்காட்டுக்கு, மரத்துண்டுகளைக் காய்கறிகளால் போர்த்தி அவற்றை அகற்றும் விளையாட்டு யானைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதே போல, ஓராங்குத்தான் எனப்படும் மனிதக் குரங்குகள், பொட்டலங்களைப் பிரித்து அவற்றுக்குள் இருக்கும் வேர்க்கடலைகளையும் உலர்திராட்சைப் பழங்களையும் உண்டன.

ரஷ்யாவில் பொதுவாக பனிக்காலக் குளிர் கடுமையாக இருந்தபோதும் அந்த நேரத்திலும் இயங்கி வருகையாளர்களை வரவேற்கும் வழக்கத்தை இந்த விலங்கியல் தோட்டம் கொண்டுள்ளது. 

விலங்கியல் தோட்டத்திலுள்ளேயே இருக்கும் மழைக்காட்டுப் பனைமர இல்லம், மந்திர மலை போன்ற பகுதிகளில் வருகையாளர்கள் இதமான வெப்பத்தை உணரலாம்.

இதற்கு முன்னதாக, ஹங்கேரிய, சீனக் கலைஞர்கள் உருவாக்கியுள்ள ஒளிக்கூண்டு விளக்குகள் ஒளிசேர்க்கின்றன.  அத்துடன், கைகளால் வனையப்பட்ட பல நூறு எல்இடி ஒளிச்சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்