ஜூலியா நிக்கோல் மோஸ் எனும் மாது 79 நாய்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: மதர்ஷிப் / இணையம்
79 Charges for Allegedly Keeping 79 Dogs.
Julia Nicole Moss, 50, faces 82 charges related to having 79 Poodle dogs at a Sembawang property without a valid NParks license. Singapore's regulations allow a maximum of three dogs per private residence. Moss is also accused of keeping more dogs than permitted without a license. Additionally, she allegedly failed to implant microchips in all the puppies and didn't inform NParks before moving them from another Wak Hassan Drive house. She will reappear in court in August.
Generated by AI
சிங்கப்பூரில் ஒருவர் மூன்று வளர்ப்பு நாய்களை மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், தரை வீட்டில் வசிக்கும் ஜூலியா நிக்கோல் மோஸ் என்ற 50 வயது மாது 79 நாய்க்குட்டிகளை வைத்திருந்தார்.
இவர் செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வாக் ஹசான் டிரைவ் பகுதியில் வசிக்கிறார்.
இவர் தேசிய பூங்காக் கழகத்திடம் உரிமம் பெறாமல் இத்தனை நாய்க்குட்டிகளை வைத்திருந்தது சட்டப்படி குற்றமாகும்.
இந்த நாய்க்குட்டிகள் அனைத்தும் ‘பூடல்’ வகையைச் சேர்ந்தவை.