விளையாட்டின் வழியே நல்வாழ்வு, படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கை

விளையாட்டின் வழியே நல்வாழ்வு, படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கை

2 mins read
44702ddc-b33e-4889-8e96-bfe9ed3ef6c4
கடந்த ஆண்டு சிங்கப்பூர் வடிவமைப்பு வாரத்தில் வடிவமைப்பு வட்டாரமாகத் தனது பயணத்தைத் தொடங்கிய மறுகட்டமைப்பு புத்தாக்க நடவடிக்கை. - படம்: சிங்கப்பூர் அறிவியல் பூங்கா
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் மறுகட்டமைப்பு (REINVENTION) எனும் புத்தாக்க நடவடிக்கை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

சிங்கப்பூர் வடிவமைப்பு மன்றத்தின் ஆதரவோடு இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கி நவம்பர் 22ஆம் தேதி வரை அது நடைபெறுகிறது.

மறுகட்டமைப்பு: அனைத்து விளையாட்டு (REINVENTION: ALL PLAY) எனும் பெயரில் நடக்கும் அச்செயல்பாடு, வட்டாரத்தைப் புத்தாக்கம், சமூகப் பிணைப்பை ஊக்குவிக்கும் அதிநவீன விளையாட்டுத் தளமாக உருமாற்றுகிறது.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் வடிவமைப்பு வாரத்தில் வடிவமைப்பு வட்டாரமாகத் தனது பயணத்தை அந்த நடவடிக்கை தொடங்கியது.

இவ்வாண்டு விளையாட்டை ஆராய்ச்சி, ஆய்வு, பரிசோதனை ஆகியவற்றின் வடிவமாக அது அணுகுகிறது.

இந்த மூன்று மாத திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், பங்காளிகள் ஒன்றிணைந்து பொது இடங்களை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகின்றனர்.

அச்செயல்பாடு வழங்கும் மூன்று முக்கிய அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம்.

பிளேலேப் (PlayLab): ‘சிந்தி’, ‘உருவாக்கு’, ‘இயங்கு’, ‘அனுபவி’, ‘இணை’ ஆகிய ஐந்து கருப்பொருள்களில் சுயமாகப் பார்வையிடும் கண்காட்சிகள் ஜீனியோ மையத்தில் இடம்பெறும்.

பிளேமிஷன் (PlayMission): மண்டாய் எக்ஸ் அமைப்பின் ‘ரேஞ்சர் படிஸ்: தி பிளானட் கப்’ (Ranger Buddies: The Planet Cup) மூலம் தொடங்கும் இந்நிகழ்ச்சி, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும். விளையாட்டின் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைச் சிறார்களுக்குக் கற்றுத் தருவது இதன் நோக்கமாகும்.

பிளேகோர்ட் (PlayCourt): 7 சயின்ஸ் பார்க் டிரைவில் உள்ள வெளிப்புறப் பகுதி ஒரு விளையாட்டு நிலப்பரப்பாக மாற்றப்படும். கூடைப்பந்து, காற்பந்து, பிக்கில்பந்து போன்ற விளையாட்டுத் தளங்களுடன், பொதுமக்களே இணைந்து உருவாக்கும் சமூகச் சுவரோவியப் பணியும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் இலவசமாகப் பார்வையிடக்கூடிய இந்நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கும் பதிவுக்கும் அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்
புத்தாக்கம்சிங்கப்பூர்அறிவியல்பூங்கா