பறந்துகொண்டே தூங்கும் பறவை! விலங்குகளின் விசித்திரமான தூக்கம்!

பறந்துகொண்டே தூங்கும் பறவை! விலங்குகளின் விசித்திரமான தூக்கம்!

1 mins read
ce1f77d6-52e1-4cfd-bb1a-0153e2a0a154
விலங்குகள், பறவைகள். - படங்கள்: கல்கி/ செயற்கை நுண்ணறிவு

நாம் எல்லோரும் தினமும் இரவு நேரத்தில் தூங்குகிறோம் அல்லவா? நம்மைப் போலவே எல்லா உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். உணவில்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் தூக்கம் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது.

நாம் பயமில்லாமல் படுத்துத் தூங்குவதுபோல எல்லா விலங்குகளாலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. சிங்கம், யானை, காண்டாமிருகம் போன்ற பெரிய விலங்குகளுக்கு யாரைப் பார்த்தும் பயம் இருக்காது.

அதனால் அவை தைரியமாகத் தூங்கும். ஆனால் மான், முயல் போன்ற சாதுவான விலங்குகள் எதிரிகளுக்குப் பயந்து கொண்டேதான் தூங்கும். விலங்குகள் எப்படி எல்லாம் விசித்திரமாகத் தூங்குகின்றன என்று பார்ப்போமா?

டால்பின்கள் தூங்கும்போது அவற்றின் மூளையில் ஒரு பகுதி மட்டுமே தூங்கும். மறுபகுதி விழித்துக்கொண்டே இருக்கும். அப்போதுதான் எதிரிகள் தாக்க வரும்போது சுதாரித்துக்கொள்ள முடியும்.
டால்பின்கள் தூங்கும்போது அவற்றின் மூளையில் ஒரு பகுதி மட்டுமே தூங்கும். மறுபகுதி விழித்துக்கொண்டே இருக்கும். அப்போதுதான் எதிரிகள் தாக்க வரும்போது சுதாரித்துக்கொள்ள முடியும். - செயற்கை நுண்ணறிவு/கல்கி
யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே குட்டித் தூக்கம் போடும். நன்றாக ஆழ்ந்து தூங்க வேண்டும் என்றால் மட்டுமே தரையில் படுக்கும். இவற்றுக்குச் சாப்பாட்டில்தான் கவனம் அதிகம் என்பதால் சாப்பிட்டு முடித்த பிறகுதான் தூக்கத்தைப் பற்றிக் கவலைப்படும்.
யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே குட்டித் தூக்கம் போடும். நன்றாக ஆழ்ந்து தூங்க வேண்டும் என்றால் மட்டுமே தரையில் படுக்கும். இவற்றுக்குச் சாப்பாட்டில்தான் கவனம் அதிகம் என்பதால் சாப்பிட்டு முடித்த பிறகுதான் தூக்கத்தைப் பற்றிக் கவலைப்படும். - செயற்கை நுண்ணறிவு/கல்கி
பனிக்கரடிகள் குளிர்காலம் வந்தால் நீண்ட உறக்கத்திற்குச் சென்றுவிடும். ஓராண்டில் மூன்று மாதங்களுக்கு மேல் இவை அசைவின்றித் தூங்கிக்கொண்டே இருக்கும். இதைத்தான் நீண்ட துயில் என்கிறோம்.
பனிக்கரடிகள் குளிர்காலம் வந்தால் நீண்ட உறக்கத்திற்குச் சென்றுவிடும். ஓராண்டில் மூன்று மாதங்களுக்கு மேல் இவை அசைவின்றித் தூங்கிக்கொண்டே இருக்கும். இதைத்தான் நீண்ட துயில் என்கிறோம். -
நீர்நாய்கள் தூங்கும் விதம் மிகவும் அழகானது. இவை தண்ணீரில் மேல்நோக்கி மிதந்துகொண்டே தூங்கும். அப்படித் தூங்கும்போது, நீரில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க, ஒன்றோடொன்று கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். பார்க்கவே இது அழகாக இருக்கும். 
நீர்நாய்கள் தூங்கும் விதம் மிகவும் அழகானது. இவை தண்ணீரில் மேல்நோக்கி மிதந்துகொண்டே தூங்கும். அப்படித் தூங்கும்போது, நீரில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க, ஒன்றோடொன்று கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். பார்க்கவே இது அழகாக இருக்கும்.  -
பென்குவின்கள் குட்டித் தூக்கம் போடுவதில் வல்லவர்கள். ஒரு மணி நேரத்திற்குள் நூறு முறை கூட விட்டு விட்டுத் தூங்கி எழும் தன்மை இவற்றுக்கு உண்டு.
பென்குவின்கள் குட்டித் தூக்கம் போடுவதில் வல்லவர்கள். ஒரு மணி நேரத்திற்குள் நூறு முறை கூட விட்டு விட்டுத் தூங்கி எழும் தன்மை இவற்றுக்கு உண்டு. -
பாம்புகளுக்கும் மீன்களுக்கும் நம்மைப் போலக் கண் இமைகள் கிடையாது. அதனால் அவை கண்களைத் திறந்து வைத்தபடியேதான் தூங்கும். பாம்பு விழித்திருக்கிறதா அல்லது தூங்குகிறதா என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். சில வகை மீன்களும் இப்படித்தான் பாதி விழிப்பில் இருந்தபடியே தூங்கும்.
பாம்புகளுக்கும் மீன்களுக்கும் நம்மைப் போலக் கண் இமைகள் கிடையாது. அதனால் அவை கண்களைத் திறந்து வைத்தபடியேதான் தூங்கும். பாம்பு விழித்திருக்கிறதா அல்லது தூங்குகிறதா என்பதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். சில வகை மீன்களும் இப்படித்தான் பாதி விழிப்பில் இருந்தபடியே தூங்கும். -
செந்நாரை என்று அழைக்கப்படும் பூநாரைகள், ஒற்றைக் காலில் நின்றுகொண்டே தூங்கும். அப்போது தன் தலையைச் சிறகுக்குள் புதைத்து வைத்துக்கொள்ளும். 
செந்நாரை என்று அழைக்கப்படும் பூநாரைகள், ஒற்றைக் காலில் நின்றுகொண்டே தூங்கும். அப்போது தன் தலையைச் சிறகுக்குள் புதைத்து வைத்துக்கொள்ளும்.  -
‘அல்பைன் ஸ்விஃப்ட்’ என்ற ஒரு வகைப் பறவை வானத்தில் பறந்து கொண்டே தூங்கும் சக்தி வாய்ந்தது. வெகு தூரம் பயணம் செய்யும்போது, பறந்துகொண்டே இது ஓய்வெடுத்துக் கொள்ளும். 
‘அல்பைன் ஸ்விஃப்ட்’ என்ற ஒரு வகைப் பறவை வானத்தில் பறந்து கொண்டே தூங்கும் சக்தி வாய்ந்தது. வெகு தூரம் பயணம் செய்யும்போது, பறந்துகொண்டே இது ஓய்வெடுத்துக் கொள்ளும்.  -
வௌவால்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டே தூங்கும். அவற்றால் தரையிலிருந்து எழும்பிப் பறக்க முடியாது. தலைகீழாகத் தொங்கும்போது, பிடியை விட்டவுடனே கீழே விழும் வேகத்தை வைத்துச் சிறகை விரித்துப் பறந்துவிடும். இதற்காகத்தான் அவை தலைகீழாகத் தூங்குகின்றன.
வௌவால்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டே தூங்கும். அவற்றால் தரையிலிருந்து எழும்பிப் பறக்க முடியாது. தலைகீழாகத் தொங்கும்போது, பிடியை விட்டவுடனே கீழே விழும் வேகத்தை வைத்துச் சிறகை விரித்துப் பறந்துவிடும். இதற்காகத்தான் அவை தலைகீழாகத் தூங்குகின்றன. -
இறுதியாக சுறுசுறுப்பான எறும்புகள் தூங்கவே தூங்காது என்று நாம் நினைப்போம். ஆனால் வேலைக்கார எறும்புகள் ஒரு நாளைக்கு 250 முறைக்கும் மேல் குட்டித் தூக்கம் போடும். ஒவ்வொரு முறையும் ஒரு நிமிடம் மட்டுமே இவை தூங்கும்.
இறுதியாக சுறுசுறுப்பான எறும்புகள் தூங்கவே தூங்காது என்று நாம் நினைப்போம். ஆனால் வேலைக்கார எறும்புகள் ஒரு நாளைக்கு 250 முறைக்கும் மேல் குட்டித் தூக்கம் போடும். ஒவ்வொரு முறையும் ஒரு நிமிடம் மட்டுமே இவை தூங்கும். -
குறிப்புச் சொற்கள்