சிறுவர் தினக் கொண்டாட்டம்

சிறுவர் தினக் கொண்டாட்டம்

படம்: துர்கா எட்டிக்கன்

05 Oct 2026 - 6:30 am

1 mins read

ஃபெர்ன்வேலில் அமைந்துள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் (My First Skool) பாலர் பள்ளியில் இந்த ஆண்டுச் சிறுவர் தினக் கொண்டாட்டம், ‘ஜூடாஸ்டிக் ப்ளே டே’ (Zootastic play day) என்ற கருப்பொருளில் நடைபெற்றது. 

விழாவை முன்னிட்டு பிள்ளைகளை விலங்குகளின் உடைகளில் வருமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. 

புகைமூட்டம் காரணமாகத் திட்டமிடப்பட்டிருந்த சில வெளியரங்குச் செயல்பாடுகள் ரத்து செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளரங்கிற்கு மாற்றப்பட்டன.

குழந்தைகளுக்கு முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் பள்ளி நிர்வாகம் இந்த நிகழ்ச்சியை மிகச் சிந்தனையுடன் வடிவமைத்திருந்தது. 

விலங்குகள் என்ற கருப்பொருள் எப்போதுமே பிள்ளைகளிடையே பெரும் வரவேற்பைப் பெறும் ஒன்றாகும்.

இந்தக் கொண்டாட்டம் பிள்ளைகளை மட்டுமன்றி பெற்றோர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

சிறுமி தான்யா, இளஞ்சிவப்பு நிற முயலாகவும் அவளுடைய தம்பி துருவ் விசாகன் புலியாகவும் வேடமணிந்து மகிழ்ந்தனர். 

வண்ணக் கலவைகள் குழந்தைகளின் முகங்களில் தீட்டப்பட்டதால், அவர்கள் தங்களுக்குப் பிடித்த விலங்குகளைப் போலவே தத்ரூபமாகக் காட்சியளித்தனர்.

 எந்த விலங்காக வேடம் குழந்தைகளுடன் விவாதிக்கவும், அதற்கான உடைகள் மற்றும் பொருள்களை ஒன்றாகச் சேர்த்து வாங்கவும் இது பெற்றோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுவடைந்தது.

இந்தச் சிறப்பான நிகழ்வைச் சாத்தியமாக்கிய பள்ளியின் முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஆசிரியர்களும் விதவிதமான வேடமணிந்து, பள்ளிக்கு வந்த குழந்தைகளை மிகுந்த ஆற்றலுடன் வரவேற்றது அனைவரையும் ஈர்த்தது.

குறிப்புச் சொற்கள்
குழந்தைகொண்டாட்டம்பள்ளி