பழங்குடி மரபை பறைசாற்றிய சிறுவர்கள்

2 mins read
b95e0dca-6085-4b1e-b89d-b5381531245e
‘இளம் சிறகுகள்’ பயிலரங்கு நடனம், கதை சொல்லுதல், கலை நுணுக்கங்கள் வழி, குறவஞ்சி மரபின் செழுமை சிறார்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன்

குறிஞ்சி மலையில் குடியிருந்த குறவர் பாரம்பரியத்தை கிட்டத்தட்ட 60 குழந்தைகள் கற்றுக் கொண்டார்கள்.

தேசிய நூலகத்தின் ‘த போட்’ வளாகத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற ‘இளம் சிறகுகள்’ பயிலரங்கு நடனம், கதை சொல்லுதல், கலை நுணுக்கங்கள் வழி, குறவஞ்சி மரபின் செழுமையை சிறார்களுக்கு எடுத்துக் கூறியது.

இவ்வாண்டின் இளையர் விழாவில் சேர்ந்துள்ள புதிய பங்காளிகளில் ஒன்றான ‘சிறகுகள்’ நடன அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

“பழங்குடி மக்களின் கலாசாரம், மரபு பொதுவாக சிங்கப்பூரில் காண்பது அரிது,” என்றார் ‘சிறகுகள்’ நடன அமைப்பின் நிறுவனரும் ஏற்பாட்டாளருமான ஐஸ்வரியா சுந்தர், 35.

“கதை சொல்லுதல், நடனம், வண்ணம் தீட்டுதல் போன்ற பகுதிகளை இணைப்பதால் தமிழர் கலாசாரத்தை பற்றிக் குழந்தைகளுக்கு முழுமையான கற்றல் பிறக்கிறது,” என்றார்.

நிகழ்ச்சி ஒரு சுவாரசியமான கதை சொல்லும் அங்கத்துடன் தொடங்கியது.

சுறுசுறுப்பான சுற்றுச்சூழலை மெருகூட்ட குறத்தி வேடம் பூண்ட ஒரு நடனமணி குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார்.
சுறுசுறுப்பான சுற்றுச்சூழலை மெருகூட்ட குறத்தி வேடம் பூண்ட ஒரு நடனமணி குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார். - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன்

சுறுசுறுப்பானசுறுப்பான சுற்றுச்சூழலை மெருகூட்ட குறத்தி வேடம் பூண்ட ஒரு நடனமணி குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார்.

குறவன், குறத்தி கதாபாத்திரங்களுக்கு சிறுவர்கள் வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்கள்.
குறவன், குறத்தி கதாபாத்திரங்களுக்கு சிறுவர்கள் வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்கள். - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன்

குறவன், குறத்தி கதாபாத்திரங்களுக்கு சிறுவர்கள் வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்கள்.

திருவாட்டி ஐஸ்வரியா வழிநடத்திய ஒரு பாரம்பரிய குறவஞ்சி நடனத்தைச் சிறுவர்கள் கற்றுக்கொண்டு, குறவன் குறத்தி போல வேடமிட்டு குதூகலமாக ஆடி மகிழ்ந்தனர்.
திருவாட்டி ஐஸ்வரியா வழிநடத்திய ஒரு பாரம்பரிய குறவஞ்சி நடனத்தைச் சிறுவர்கள் கற்றுக்கொண்டு, குறவன் குறத்தி போல வேடமிட்டு குதூகலமாக ஆடி மகிழ்ந்தனர். - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன்

திருவாட்டி ஐஸ்வரியா வழிநடத்திய ஒரு பாரம்பரிய குறவஞ்சி நடனத்தைச் சிறுவர்கள் கற்றுக்கொண்டு, குறவன் குறத்தி போல வேடமிட்டு குதூகலமாக ஆடி மகிழ்ந்தனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மொழி, கலாசாரத்தை பறைசாற்றுவது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கிடையே சமூக உணர்வை தூண்டுகிறது என்று தெரிவித்தார் தாயார் சசிரேகா, 41.

தனது மகன் இது போன்ற நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் மட்டும் பங்குபெற்றுள்ளதாகத் தெரிவித்தார் அவர்.

“மற்ற பிள்ளைகளுடன் உரையாடுவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு,” என்றார்.

சமூக உணர்வு, நட்பு போன்ற குணங்கள் வளர்ப்பது பற்றியும் பேசினார் தாயார் காயத்திரி, 33. முன்பு பல போட்டிகளில் மட்டும் பங்கேற்ற தனது 6 வயது மகள் இஷாவுக்கு இது போன்ற பட்டறைகளில் கலந்துகொள்வது முதல்முறையாகும்.

“தொடர்ந்து நம் கலாசாரம், மரபுடன் இணைந்திருக்க இதுபோன்ற முயற்சிகள் பெருமளவுக்கு உதவும்,” என்றார்.

நிகழ்ச்சியில் ஏறத்தாழ 20 தொண்டூழியர்கள் பற்பல அங்கங்களை வழிநடத்த உதவினார்கள்.

“தமிழ் கற்றல் வெறும் வகுப்பறை, நூலகத்துக்கு மட்டும் வரை கட்டுப்படுத்தாமல் இதுபோன்ற புதுமையான, சுவாரசியமான வழிகளில் மேற்கொள்ளலாம்,” என்றார் நிகழ்ச்சியில் தொண்டூழியராக சேவையாற்றிய ராஜலக்ஷ்மி, 40.

சிறு வயதில் எந்தவொறு கற்றலும் மனதில் ஆழமாகப் பதியும். அதனால் சிறுவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டுவது எதிர்காலத்தில் ஒரு மிகப் பெரிய பலனை அளிக்கும் என்று தெரிவித்தார் வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம், 65.

“இது போன்ற முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்