வண்ண விளக்குகள், வானூர்திக் காட்சிகள், பெரிய பொம்மைகளுடன் தேசிய தின அணிவகுப்பு

வண்ண விளக்குகள், வானூர்திக் காட்சிகள், பெரிய பொம்மைகளுடன் தேசிய தின அணிவகுப்பு

2 mins read
537d5f97-bf12-4a29-bebe-0ea4f6a5fd10
வண்ண விளக்குகளுடன் மின்னவுள்ள தேசிய விளையாட்டரங்க மேடை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டமான, வியப்பூட்டும் அங்கங்களுக்குக் குறைவிருக்காது.

அதேபோல, இந்த ஆண்டும் பெரிய அம்பு போன்ற வடிவமைப்பு கொண்ட அரங்கில் பல சுவாரசியமான அங்கங்களுடன் தேசிய தினம் களைகட்டவுள்ளது.

கதைபேசும் பொம்மைகள்

காற்று நிரப்பப்பட்ட Dugongs எனும் கடற்பன்றிப் பொம்மைகள்.
காற்று நிரப்பப்பட்ட Dugongs எனும் கடற்பன்றிப் பொம்மைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மொத்தம் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது, மூன்றாவது பிரிவுகளில் மிகப்பெரிய கண்கவர் பொம்மைகள் இடம்பெறும்.

மூன்று வகையான பொம்மைகள் இதில் இடம்பெறுகின்றன. காற்றால் நிரப்பப்பட்ட மிதவை பொம்மைகள், சக்கரம் வைக்கப்பட்ட தளத்தில் கொண்டுவரப்படும் பொம்மைகள், மிதிவண்டிபோல் தேசிய சேவையாளர்கள் ஓட்டிவரவுள்ள பொம்மைகள் என ஒவ்வொரு வகை பொம்மையும் வெவ்வேறு கருப்பொருளில் இடம்பெறும்.

இரண்டாவது பிரிவில், மேம்பட்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஆறு முக்கிய அம்சங்களைக் கொண்டாடும் வகையில் ஆறு மிதவை பொம்மைகள் இடம்பெறுகின்றன.

‘சிங்கா’ பொம்மை.
‘சிங்கா’ பொம்மை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சக்கரம் வைக்கப்பட்ட தளத்தின்மேல் இருக்கும் இந்தப் பொம்மைகள் ஜாய்ஸ்டிக் எனப்படும் இயக்கக் கருவியின் உதவியுடன் இயக்கப்படும்.

இதே அங்கத்தில், பெரிய, காற்று நிரப்பப்பட்ட கடற்பன்றிப் பொம்மைகள் இடம்பெறும். இது, 14ஆம் நூற்றாண்டின் தெமாசெக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த பீங்கான் வர்த்தகத்தை நினைவூட்டும் வகையில் வெள்ளை, நீல நிறங்களைக் கொண்டிருக்கும்.

மூன்று சக்கர மிதிவண்டியின்மேல், ஒளி வடிவமைப்பை உருவாக்கும் வகையில் அமைந்த பெரிய கைப்பாவை விலங்குப் பொம்மைகள்.
மூன்று சக்கர மிதிவண்டியின்மேல், ஒளி வடிவமைப்பை உருவாக்கும் வகையில் அமைந்த பெரிய கைப்பாவை விலங்குப் பொம்மைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூன்றாவது பிரிவில், சிறிய மிதிவண்டியின்மேல் அமைக்கப்பட்ட ஐந்து சருகுமான் (Mousedeers), இரண்டு தப்பீர் பன்றி (Tapirs) என ஏழு விலங்குகள் வலம்வரும்.

சிங்கப்பூர்வாழ் உயிரினங்களின் வரலாற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இது, கைப்பாவை போன்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்க நிறங்களில் மின்னும் இவை, ஒளியை வாங்கி அழகிய வடிவமைப்புகளில் நிழல் தரையில் விழச்செய்யுமாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர மிதிவண்டியை ஓட்டி வரும்போது, விலங்குகளின் கால்களும் உடலும் அசையும் வகையிலும் அமையும்.

கப்பல்கள்

மூன்றாவது பிரிவில், மனித இனத்தின் வரலாறு, பல்லின கலாசாரச் சமூகத்தின் வேர்களை வெளிக்காட்டும் வகையில், கப்பல் வடிவிலான ‘லேன்டர்ன்’ விளக்குகள் இடம்பெறவுள்ளன.

ஆறரை மீட்டர் நீளமும், 4.7 மீட்டர் உயரமும் கொண்ட ஆறு கப்பல்கள் இதில் இடம்பெறும்.

ஆளில்லா வானூர்திகள்

அரங்கின் ஒரு பகுதியிலிருந்து பறக்கத் தயாராகக் காத்திருக்கும் ஆளில்லா வானூர்திகள்.
அரங்கின் ஒரு பகுதியிலிருந்து பறக்கத் தயாராகக் காத்திருக்கும் ஆளில்லா வானூர்திகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின நிகழ்ச்சியில் முதன்முறையாக ஆளில்லா வானூர்திகள் அடங்கிய காட்சி இடம்பெறவுள்ளது. மொத்தம் 300 வானூர்திகள், ஒளி, ஒலி, பல்லூடக அம்சங்கள் ஒத்திசைவுடன் அரங்கத்தை உற்சாகமூட்டவுள்ளது.

மேடையில் அமையவுள்ள ஒளி சிந்தும் பல்லூடகக் காட்சி.
மேடையில் அமையவுள்ள ஒளி சிந்தும் பல்லூடகக் காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும், மொத்த அரங்கமும் 54 லேசர் அமைப்புகள், 1,654 பொழுதுபோக்கு விளக்குக் கட்டமைப்புகளுடன் மின்னும்.

மேடையைச் சுற்றி ‘எல்இடி’ ஒளிப்பட்டைகள், இசை நிகழ்ச்சிபோல ‘பீம் விளக்குகள்’ ஆகியவற்றுடன் நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர தயாராக உள்ளது.

குறிப்புச் சொற்கள்