60ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் சிங்கப்பூருக்கு வாழ்த்துகள்

60ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் சிங்கப்பூருக்கு வாழ்த்துகள்

2 mins read
f6f9b7cd-71ed-4db6-ad98-6077bc5987aa
தேசிய தினக் கொண்டாட்டத்தை நேரில் காண வருபவர்களுக்கு கொடுக்க தயாராக இருக்கும் ஏழு வகையான அன்பளிப்புப் பைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

என் நாட்டின் சிறப்புத் தன்மை

ரு பாதுகாப்பான நாடு! ஒரு தூய்மை மிக்க நாடு! ஓர் அழகான நாடு! பல இன மக்கள் வாழும் நாடு! எனக்குப் பிடித்த நாடு சிங்கப்பூர் மட்டுமே! மஹத்யா 4D

என் நாடு!

சிங்கப்பூர் ஓர் அழகான நாடு! அதன் பசுமையைப் பலரும் போற்றுகிறார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எனவே, சிங்கப்பூரான என் நாட்டிற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! நிகேஷ் 4J

என் நாட்டின் சிறப்புகள்

சிங்கப்பூர் ஒரு பாதுகாப்பான நாடு!

அது தூய்மை மிக்க நாடு!

அது அழகான நாடு!

எனக்குப் பிடித்த நாடு, சிங்கப்பூர்!

எனவே, எனது நாட்டுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

குமார் பிரதிஷ் 4G

இது எந்த நாடு?

பாதுகாப்பான நாடு எது? பல இன மக்கள் வாழும் நாடு எது? அழகான நாடு எது? தூய்மை மிக்க நாடு எது? வேறென்ன? அது நம் நாடு சிங்கப்பூர்தான்! எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்!

அணிஷ் 4H

எனது சிங்கை

அழகிய சிங்கை! நாம் அனைவரும் வாழும் சிங்கை! 60 ஆண்டுகளாக நம்மைக் காக்கும் சிங்கை! என்னை அன்போடு அரவணைக்கும் சிங்கை!

எனவே, உனக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

உதய் ஈஷ்வர் 6D

சிங்கப்பூர் நகரம்

தூய்மையும் பசுமையும் நிறைந்த நாடு! என்றும் சிறந்து விளங்கும் நாடு! நான்கு இனத்தவர்களைக் கொண்ட நாடு!

பலரும் போற்றும் நாடு! எனக்குப் பிடித்த நாடு! என் நாடான சிங்கப்பூர். உனக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

அன்பகன் 6D

சிங்கப்பூருக்கு வாழ்த்துகள்

நீ அறுபது ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளாய். நீ பல இன் துன்பங்களைக் கடந்ததோடு வெற்றியும் கண்டுள்ளாய். எனவே, நானும் உன்னைப் போன்று வளர்ச்சி அடைய விரும்புகிறேன். அதற்கு நீயே எனக்கு வழிகாட்டி ஆவாய்! ஆதலால், வாழ்க வளமுடன் சிங்கப்பூர்!

நித்தின் 6D

பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் நற்பண்பு மிக்கவர்கள். அவர்கள் மனம் தளராமல் செயல்படுபவர்கள். அவர்கள் கடினமாக உழைப்பவர்கள். அவர்கள் நாட்டுக்காகவும் அவர்களது குடும்பத்துக்காகவும் பாடுபடுபவர்கள். என் நாட்டு மக்களைப் பற்றி நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இத்தனை பெருமை மிக்க மக்களைக் கொண்டிருக்கும் என் சிங்கப்பூருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

தவன் 6C

சிங்கப்பூருக்கு வாழ்த்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சிங்கப்பூர். நீ 60 ஆண்டுகள் வெற்றியுடன் கடந்துவிட்டாய். நீ மேன்மேலும் முன்னேறிச் செல்ல என் இதயம்கனிந்த வாழ்த்துகள் சிங்கப்பூர்!

ராகவர்தினி 5G

சிங்கப்பூருக்கு 60 வயது!

சிங்கப்பூருக்கு 60வது தேசிய தின வாழ்த்துகள்! இங்கே இயற்கை வளங்கள் அனைத்தும் பசுமையாகவும் செழுமையாகவும் இருக்கின்றன. அதனால், நான் ஒரு சிங்கப்பூர் குடிமகளாக இருப்பதை எண்ணிப் பெருமிதம்கொள்கிறேன். எங்களை வாழ வைக்கும் உன்னை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

ஈவா 5C

என் பொன்னான சிங்கை நாடு! சிங்கை நாடு என் வீடு! அதற்கு நான் என் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அஷ்ரித்தா 5J

எனது நாடு சிங்கப்பூர். இது சிறிய நாடு. ஆனால், மிகவும் அழகான நாடு. அதனால்தான், பல சுற்றுப்பயணிகள் இங்கு வருகிறார்கள். என் நாட்டைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எனவே, 60வது பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்!

யாழினி 5D ஜெமின் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்