உடலில் வலுவான தசை எது தெரியுமா?

உடலில் வலுவான தசை எது தெரியுமா?

2 mins read
9a04ff54-958f-46c7-a84c-b7bcaf0f3039
நமது உடலில் வலுவான தசை தாடைத் தசை (Masseter) ஆகும். - படம்: செயற்கை நுண்ணறிவு

வலுவான தசை: நாக்கு மிக மிக நெகிழ்வான, நாள் முழுவதும் சோர்வில்லாமல் வேலை செய்யும் ஒரு தசை. ஆனால், மனித உடலின் மிக வலிமையான தசை நமது தாடைத் தசை (Masseter) ஆகும். நாம் கடினமான உணவுகளைக் கடிப்பதற்கும் மெல்லுவதற்கும் இந்தத் தாடைத் தசைதான் தன் முழு வலிமையைப் பயன்படுத்துகிறது.

வளர்ந்துகொண்டே இருக்கும் காது, மூக்கு: மனித உடலின் மற்ற எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு வளர்வதை நிறுத்திவிடும். ஆனால், நமது காது மற்றும் மூக்கின் நுனிப்பகுதி எலும்பால் ஆனவை அல்ல; அவை “குருத்தெலும்பு” (Cartilage) என்ற மென்மையான திசுக்களால் ஆனவை. இந்தத் திசுக்கள் தொடர்ந்து வளர்வது மட்டுமல்லாமல், புவியீர்ப்பு விசையின் (Gravity) காரணமாகக் கீழ்நோக்கி இழுக்கப்படுவதால் அவை பெரியதாகத் தெரிகின்றன.

வயது ஆகும்போது மனித உடலின் காது, மூக்கு ஆகியவை தொடர்ந்து வளரும்.
வயது ஆகும்போது மனித உடலின் காது, மூக்கு ஆகியவை தொடர்ந்து வளரும். - படம்: செயற்கை நுண்ணறிவு

தனித்துவமான நாக்கு ரேகை: மனிதர்களின் கைரேகை எப்படி ஒருவருக்கு இருப்பதுபோல இன்னொருவருக்கு இருக்காதோ, அதேபோல நாக்கின் வடிவமும், அதில் உள்ள சிறிய மேடுகளும் (Papillae) ஒவ்வொரு மனிதருக்கும் முற்றிலும் மாறுபடும். எதிர்காலத்தில் கைரேகை ஸ்கேனர்(வருடி)களைப் போல ‘நாக்கு ஸ்கேனர்கள்’ கூடப் பாதுகாப்பிற்காக வரலாம்!

-

தும்மலின் அசுர வேகம்: மூக்கிற்குள் நுழையும் தூசி, கிருமிகள் அல்லது ஒவ்வாமைப் பொருள்களை வெளியேற்ற உடல் செய்யும் ஒரு தற்காப்பு முறைதான் தும்மல். ஒருமுறை தும்மும்போது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வெளியேறுகிறது. இதனுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான எச்சில் துளிகளும் வெளியேறும். அதனால்தான் தும்மும்போது கைக்குட்டையால் வாயை மூடிக்கொள்வது மிகவும் அவசியம்!

-
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்