ஸ்கேட்போர்டு ஓட்டும் ‘ஜியோட்டோ’!

ஸ்கேட்போர்டு ஓட்டும் ‘ஜியோட்டோ’!

2 mins read
208f1d49-d234-43a7-b345-18ba9bd659d1
ஸ்கேட்போர்டு ஓட்டும் ஜியோட்டோ நாய். - படம்: கிட்ஸ் நியூஸ்
Google News Preferred Icon

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ஜியோட்டோ’ என்ற புல்டாக் (Bulldog) ஸ்கேட்போர்டு ஓட்டுவதில் திறமையானது! ஸ்கேட்போர்டில் 100 மீட்டர் தூரத்தை மிக வேகமாக கடக்கும் நாய் என்ற ‘கின்னஸ் உலக சாதனை’யைப் படைக்க ஜியோட்டோ இப்போது தயாராகி வருகிறது.

சிறுவர்கள் பயன்படுத்தும் சாதாரண ஸ்கேட்போர்டுகள் நாய்களின் கால்களுக்குச் சரியாக இருக்காது. அதனால், ஜியோட்டோவின் உரிமையாளர் அதற்கு ஏற்றவாறு ஒரு சிறப்பான ஸ்கேட்போர்டை அழகாகச் செய்து கொடுத்துள்ளார்.

அண்மையில் உடல்நலக் குறைவால் (கட்டி காரணமாக) ஜியோட்டோ தனது ஒரு கண்ணை இழந்துவிட்டது. ஆனால், அதற்காக அந்த நாய் முடங்கிப் போய்விடவில்லை! அறுவை சிகிச்சைக்குப் பிறகு முன்பைவிட இன்னும் வேகமாக, எந்தப் பயமும் இல்லாமல் தொடர்ந்து 2 முதல் 3 மணி நேரம் வரை ஸ்கேட்போர்டு ஓட்டுகிறது.

உடலில் ஒரு குறை இருந்தாலும், தன் முழுக் கவனத்தாலும் திறமையாலும் சாதிக்கத் துடிக்கும் இந்த ஒற்றைக் கண் நாய் உண்மையிலேயே ஒரு ‘ஹீரோ’தான்.

நீச்சல் குளங்களில் சுறா, முதலை

நீச்சல் குளத்தில் சுறா.
நீச்சல் குளத்தில் சுறா. - படம்: கிட்ஸ் நியூஸ்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மான்லி (Manly) பகுதியில், வலை பின்னப்பட்ட கடலோர நீச்சல் குளத்தில் 1.2 மீட்டர் நீளமுள்ள சுறா மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதத்தில் சுறாமீன் இருந்தபோதிலும் பலர் எந்த அச்சமுமின்றி அங்கு நீச்சலில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் வலையின் ஒரு பகுதியைத் தூக்கி, சுறாவை பாதுகாப்பாக கடலுக்குள் வெளியேற்றினர்.

கடற்கரை ஓரத்தில் முதலைத் தென்பட்டது.
கடற்கரை ஓரத்தில் முதலைத் தென்பட்டது. - படம்: கிட்ஸ் நியூஸ்

அதே வாரத்தில், ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா முகாமின் (Nitmiluk Caravan Park) நீச்சல் குளத்தில் ஒரு குட்டி முதலை நீந்திக் கொண்டிருந்தது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் இது வழிதவறி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வனத்துறையினர் அதனைப் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர்.

குறிப்புச் சொற்கள்