தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைகள் தினமும் ஊதா அணிவகுப்பும்

1 mins read
மோகன கலையரசன் ரக்ஷணாஸ்ரீ, பூச்சுன் தொடக்கப்பள்ளி, ஐந்தாம் வகுப்பு
ddfbd742-0d18-46e9-bc22-ec063c180e7d
படம் - பிக்சாபே

பள்ளியில் என் ஆசிரியர், சிங்கப்பூரில் குழந்தைகள் தினம் என்பது குழந்தைகள் சமூகத்தில் முக்கியமானவர்கள் என்பதையும் அவர்களது நலன்கள், உரிமைகள் மற்றும் எதிர்காலம் குறித்து நினைவூட்டும் நாளாகும் எனக் கூறினார்.

மேலும், “நம் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம்” என்றும் அவர் சொன்னார்.

அக்டோபர் 2ஆம் தேதி என் பள்ளியில் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடினோம். அது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது.

முதலில், பொம்மலாட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் பின்னர், சில ஆசிரியர்கள் ஒன்றாகச் சேர்ந்து நடன நிகழ்ச்சியை வழங்கினர். அதனைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

இந்த ஆண்டு, என் பள்ளியில் குழந்தைகள் தினத்துடன் ‘ஊதா பரேடு கொண்டாடப்பட்டது.

இதற்காக என் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் ஊதா நிற உடைகளில் வந்திருந்தனர்.

பிறகு, என் வகுப்பு ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கினர். ஒவ்வொரு ஆசிரியரும் வழங்கிய பரிசுகள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. மேலும், சில ஆசிரியர்கள் எங்கள் பெயர் பொறிக்கப்பட்ட பொருள்களையும் வழங்கினர்.

பிறகு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உடற் குறையுள்ளோர் விளையாடும் பாரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டான உட்கார்ந்து விளையாடும் வாலிபால் (சிட்டிங் வாலிபால்) விளையாடினோம். அப்படி விளையாடுவது, அவர்கள் சந்திக்கும் சவால்களை அறிந்துகொள்ளும் அனுபவமாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்