தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நட்பின் ஒளி

2 mins read
72636e5e-d03a-4e54-b93b-9da6ae33b20b
நண்பர்கள் தீபங்கள் ஏற்றுகிறார்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு

கண்ணனும் ரவியும் அண்டை வீட்டுக்காரர்கள். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ரவியும் கண்ணனும் தினமும் பள்ளிக்கு சேர்ந்தே செல்வார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கண்ணன் காலையில் எழுந்து ரவியைப் பார்க்க கிளம்பினான். என்ன ஆச்சரியம்! ரவியின் வீட்டு வாசலில் ரங்கோலி கோலத்துடன் வண்ண வண்ணத் தோரணங்களும், மின்னும் விளக்குகளும் வீட்டை அலங்கரித்தது.

கண்ணன் ரவியின் வீட்டின் முன்னால் நிற்கிறான்.
கண்ணன் ரவியின் வீட்டின் முன்னால் நிற்கிறான். - படம்: செயற்கை நுண்ணறிவு

அதைப் பார்த்து வியந்துபோய் நின்ற கண்ணனைப் பார்த்து வீட்டிற்குள் இருந்து ரவி ஓடி வந்தான். மறுநாள் தீபாவளி. ஆனால் அன்றே அவன் புதுத் துணி அணிந்து இருந்தான். அவன் வாசலில் நின்று ரவியிடம், “நேற்று இரவு நான் என் பெற்றோருடன் சேர்ந்து இந்த அலங்காரங்களைச் செய்தோம்,” என்றான். அதைக் கேட்ட கண்ணன் மகிழ்ச்சியுடன் மிகவும் நன்றாக இருக்கிறது ரவி. இப்போதே தீபாவளி வந்துவிட்டதுபோல் தெரிகிறது!,” என்றான்.

தன் வீட்டின் அலங்காரத்தைக் காட்டுகிறான் ரவி.
தன் வீட்டின் அலங்காரத்தைக் காட்டுகிறான் ரவி. - படம்: செயற்கை நுண்ணறிவு

கண்ணனும் சிறுவன்தானே! அவனுக்கும் ஆசை இருக்கும் அல்லவா? அவன் அம்மாவிடம், “அம்மா! நாம் எந்தப் பலகாரமும் செய்யவில்லை. மேலும் புது உடையும் வாங்கவில்லை. பரவாயில்லை அம்மா. அப்பாவின் ஊதியம் நம் அன்றாடத் தேவைக்கே சரியாக இருக்கிறது,” என்று கூறிக்கொண்டு இருக்கும்போது வாசலில் ரவியும் அவன் பெற்றோரும் பரிசுப் பொருள்களுடன் நின்றிருந்தனர்.

- படம்: செயற்கை நுண்ணறிவு

கண்ணனின் கண்களில் சந்தோஷக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. ரவியின் தாயார் பலகாரங்கள் அடங்கிய கூடையை கண்ணனின் அம்மாவிடம் கொடுத்ததோடு, “உங்கள் குடும்பத்தினருக்கு புதுத் துணிகளும் இருக்கின்றன. நாளை தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுங்கள்,” எனக் கொடுத்தார். அதைப் பெற்ற கண்ணனின் தாயார் ஆனந்தக் கண்ணீருடன் வாங்கிக்கொண்டார்.

ரவியின் தாயார் பலகாரங்களை கொடுக்கிறார்
ரவியின் தாயார் பலகாரங்களை கொடுக்கிறார் - படம்: செயற்கை நுண்ணறிவு

கண்ணனுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மகிழ்ச்சியில் திக்குமுக்காடி, ரவிக்கு நன்றி கூறினான். ரவி கொண்டு வந்திருந்த தோரணங்களை இருவரும் கண்ணன் வீட்டின் முன்னால் கட்டத் தொடங்கினர். ரவி ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க கண்ணன் தன் வீட்டு வாசலை அலங்கரித்தான். “நாம் காண்பது கனவா? இல்லை நினைவா?”என்று கண்ணன் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டான்.

நண்பர்கள் வீட்டை அலங்கரிக்கிறார்கள்
நண்பர்கள் வீட்டை அலங்கரிக்கிறார்கள் - படம்: செயற்கை நுண்ணறிவு

தீபாவளியன்று நண்பர்கள் புத்தாடை உடுத்தி வீட்டு வாசல்களில் விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார்கள். இருவரின் முகத்திலும் நட்பின் ஓளி தெரிந்தது. நீங்களும் உங்கள் அண்டைவீட்டார் அல்லது உதவி தேவைப் படுவோர்களுக்கு இதுபோல் உதவி, அவர்களின் முகத்தில் காணும் மகிழ்ச்சி என்ற ஒளிதான் உண்மையான தீபாவளிக் கொண்டாட்டம்! இந்த அன்புதான் தீபாவளியின் உண்மையான வெளிச்சம்!

நண்பர்கள் விளக்கேற்றுவார்கள்.
நண்பர்கள் விளக்கேற்றுவார்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு
குறிப்புச் சொற்கள்