கட்டடங்களை உருவாக்க பல்வேறு மூலப்பொருள்கள் தேவைப்படுகின்றன. அவையாவன:
மரம் (Wood): மரம் என்ற சொல், உயிருள்ள மரத்திற்கு (tree) மட்டுமன்றி மரப்பலகைகளுக்கும் பயன்படுத்தலாம். எளிதாகச் செதுக்கலாம். எடை குறைவு என்றாலும் வலுமிக்கது.
எஃகு (Steel): இரும்புத் தாதிலிருந்து (mineral) தயாரிக்கப்படும் உலோகம். மிகுந்த வலிமை கொண்ட எஃகு, எவ்வளவு எடையையும் வளைந்து கொடுக்காமல் தாங்கும்.
செங்கல் (Brick): களிமண்ணால் செய்யப்பட்டு, பெரிய சூளைகளில் (Kiln) சுட்டுத் தயாரிக்கப்படும் பாறைகள். இவை தீப்பிடிக்காது; மழையிலும் வெயிலிலும் சேதமடையாது; பூச்சிகளால் அழுகாது.
மூங்கில் (Bamboo): கட்டடங்கள் கட்டும்போது போடப்படும் சாரக்கட்டுகள் (Scaffolding), கூரைகள், பாலங்கள், வீட்டின் தரை (Flooring) போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஓடு (tiles): களிமண்ணால் செய்யப்பட்டு, பெரிய சூளைகளில் (Kiln) வேகவைத்து தயாரிக்கப்படுபவை. களிமண்ணால் கூரை ஓடுகள் செய்யப்படுகின்றன. வீட்டுக்குள் வெப்பம் வராமல் தடுத்து, வீட்டை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
கற்காரை (Concrete) : நடைபாதைகள், பெரிய பாலங்கள், வீடுகளின் அடித்தளங்கள் போன்றவற்றுக்குக் கற்காரை பயன்படுத்தப்படுகிறது. காரை (cement), மணல், சல்லிக் கற்கள் (ballast), நீர் ஆகிய நான்கும் சேர்ந்த கலவை இது!

