தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு குறிக்கோள், ஒரு வெற்றி!

2 mins read
e2b7bdc6-15e1-4f2a-9303-fce74787edf2
கோழியைப் பிடிக்க ஓடும் கந்தன். - படம்: செயற்கை நுண்ணறிவு

குருகுல பாடசாலையில் குரு தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே தெளிவாக புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து வந்தார்.

மாணவர்களும் சிறப்பாகக் கற்று வந்தனர். ஆனால், கந்தன் என்ற மாணவன் மட்டும் குருநாதர் தங்களுடைய நேரத்தை அதிகம் விரயமாக்குவதாய் வருந்தினான்.

நிறைய விஷயங்களை எடுத்துக் கூறாமல் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தருவது அவனுடைய நேரத்தை வீணடிப்பதாக எண்ணியதால் குருவிடம் தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தான்.

மாணவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்த குரு சற்றுத் தொலைவில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஐந்தாறு கோழிகளைத் திறந்துவிடச் சொன்னார். கந்தனும் ஓடிப்போய் திறந்து விட ஒவ்வொரு கோழியும் திசைக்கு ஒன்றாக ஓடியது.

உடன் குரு அந்தக் கோழிகளைப் போய் பிடித்து வரச் சொன்னார். கந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. திறந்துவிடச் சொன்னார். தற்பொழுது அவற்றைப் பிடித்து வரச் சொல்கிறாரே என்று கோழிகளைத் துரத்திச் சென்றான்.

எந்தக் கோழியும் அவனுடைய கையில் பிடிபடவில்லை. துரத்தி துரத்திக் களைத்துபோன கந்தன் சோர்ந்து போய் உட்காரவும், குரு, “அதோ அங்கு ஓடுகிறதே கழுத்தில் பச்சைக் கயிறு கட்டப்பட்ட கோழி, அதை மட்டும் பிடித்துக்கொண்டு வா,” என்று கூறினார். அவனும் அந்த ஒரு கோழியை மட்டும் குறிவைத்து துரத்தினார். சில நிமிடங்களிலேயே அதனைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டான்.

குருநாதர் “பார்த்தாயா ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்றுவது சிறந்தது. பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்போம். அதுபோலத்தான் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் கற்றுக்கொள்வதுதான் சிறந்ததாக இருக்கும்,” என்று கூறினார்.

உண்மையை உணர்ந்த கந்தனும் அவர் கூறிய கூற்றில் உண்மை இருப்பதை அறிந்து மன்னிப்புக் கேட்டான்.

ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது, அதை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் அதிகத் திறமையை வளர்த்துக்கொள்ளவும் உதவும் என்ற உண்மையை உணர்ந்த கந்தன் குருவிடம் மன்னிப்புக்கேட்டான்.

குருகுலம் என்பது நான்கு, ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் வீட்டில் தங்கி, அவரிடம் கல்வி கற்ற ஒரு கல்வி முறையாகும்.

மாணவர்கள் குருவின் வீட்டிலேயே தங்கி, வேதங்கள், போர்க் கலைகள், மருத்துவம் எனப் பலவற்றையும் கற்றனர். அதிகாலையில் எழுந்து, குளித்து, இறை வணக்கம் செய்துவிட்டு தினமும் வீட்டு வேலைகளைச் செய்து, பின்னர் குரு சொல்லிக்கொடுக்கும் கல்வியைக் கற்பதன் மூலம் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டார்கள்.

குறிப்புச் சொற்கள்