என் தாய் நாடு இது. இச்சிறுதீவில் பல வண்ணப் பூக்கள் போல் பல இன மக்களுடன் சேர்ந்து சிரித்து மலர்கிறோம்!
எல்லா நாடுகளுடனும் நட்பாய்ப் பழகுகிறோம்! எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறோம்! அதற்கு நம் காவலர்களுக்கு நன்றி சொல்லலாமா!
நம் தேசிய மொழிகளில் தமிழும் ஒன்று என்று நாம் பெருமை கொள்வோம்! நம் முன்னோர்களுக்கு நன்றியும் மரியாதையும் செய்வோம்! பல்லாண்டு வாழவேண்டும் எங்கள் சிங்கப்பூர்!
பெயர்: தர்ஷன் பழனி வகுப்பு: உயர்நிலை 2 விரைவுநிலை
ஓர் அழகான இடம் ஓர் அருமையான இடம் ஓர் அற்புதமான இடம் அது வேறெந்த இடம்? நம் சிங்கப்பூர்தான் அந்த இடம்!
அழகான பூந்தோட்டங்கள் அருமையான உணவு வகைகள் அன்பான மக்களைக் கொண்ட இடம் எங்கிருக்கிறது அந்த இடம்? நம் சிங்கப்பூர்தான் அந்த இடம்!
பெயர்: நிதின் ஸ்ரீநிவாசன் வகுப்பு: உயர்நிலை 2 விரைவுநிலை
எல்லா நேரமும் உணவு கிடைக்கும். உலகின் பணக்காரர் தங்க விரும்புவர். பாதுகாப்பான நாடு! புகழ்பெற்ற நாடு! தூய்மை என்றால் அது சிங்கப்பூர்தான். நாடு சிறியதுதான் புகழோ பெரியது! வாழ்க வாழ்க நம் சிங்கப்பூர்!
தொடர்புடைய செய்திகள்
பெயர்: கஷ்ஃபுல் இன்ஷிரா வகுப்பு: உயர்நிலை 3 வழக்கநிலை பள்ளி: கான் எங் செங் பள்ளி

