ஆதி காலம் முதல் ஆழ்கடல் வரை

ஆதி காலம் முதல் ஆழ்கடல் வரை

2 mins read
8d89a59d-72e5-4580-8b86-db3ed7bd5f94
10,000 சதுர மீட்டர் பரப்பளவில் ‘எக்ஸ்ப்ளோரியா’ கண்காட்சியில் 5 சுவாரசியமான பல்லூடக அங்கங்கள் இடம்பெறும். - படங்கள்: மண்டாய் வனவிலங்கு குழுமம்

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய உட்புற, இயற்கை கருப்பொருள் கொண்ட பல்லூடக கண்காட்சியில் ஒன்றான ‘எக்ஸ்ப்ளோரியா’ மார்ச் 3 ஆம் தேதி, மண்டாய் வனவிலங்கு பூங்காவில் திறக்கப்பட இருக்கிறது.

அறிவியல், நிஜ உலக காட்சிகள் வழி பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உயிரினங்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பதை ‘எக்ஸ்ப்ளோரியா’ எடுத்துக்காட்டும்.

10,000 சதுர மீட்டர் பரப்பளவில் ‘எக்ஸ்ப்ளோரியா’ கண்காட்சியில் 5 சுவாரசியமான பல்லூடக அங்கங்கள் இடம்பெறும்.

‘ரியல்ம் ஆஃப் தி ஜையண்ட்ஸ்’ (Realm of the Giants).
‘ரியல்ம் ஆஃப் தி ஜையண்ட்ஸ்’ (Realm of the Giants). - படங்கள்: மண்டாய் வனவிலங்கு குழுமம்

பார்வையாளர்கள் வரலாற்றுக்கு முந்தைய சுற்றுச்சூழல் அமைப்பை ‘ரியல்ம் ஆஃப் தி ஜையண்ட்ஸ்’ (Realm of the Giants) அங்கத்தில் காணலாம். பூமியில் நடமாடிய டைனோசர்கள், பிரம்மாண்டமான கடல் உயிரினக் காட்சிகள், ஒளி, ஒலி மற்றும் இயக்கத்தில் காண்பிக்கப்படும்.

‘மைக்ரோ வேர்ல்ட்ஸ்’ (Micro Worlds).
‘மைக்ரோ வேர்ல்ட்ஸ்’ (Micro Worlds). - படங்கள்: மண்டாய் வனவிலங்கு குழுமம்

‘மைக்ரோ வேர்ல்ட்ஸ்’ (Micro Worlds) அங்கத்தில் பொதுவாக கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள், முதுகெலும்பில்லாத உயிர்களை ஊடாடும் கண்ணாடிகளில் காணலாம்.

‘பிட்டீயர் ஏஐ எக்ஸ்ட்ரீம் ஃபிரான்டியர்ஸ்’ (Bitdeer AI Extreme Frontiers).
‘பிட்டீயர் ஏஐ எக்ஸ்ட்ரீம் ஃபிரான்டியர்ஸ்’ (Bitdeer AI Extreme Frontiers). - படங்கள்: மண்டாய் வனவிலங்கு குழுமம்

உருகும் ஆர்க்டிக் பனியில் துருவ கரடிகள், வறண்ட பாலைவனங்களில் நமக்வா பச்சோந்திகள் அதிக உயரத்தில் பறக்கும் டெமோசெல் கொக்குகளை ‘பிட்டீயர் ஏஐ எக்ஸ்ட்ரீம் ஃபிரான்டியர்ஸ்’ (Bitdeer AI Extreme Frontiers) அங்கத்தில் பார்வையிடலாம்.

‘இன்ஃபினைட் வொண்டர்லேண்ட்’ (Infinite Wonderland).
‘இன்ஃபினைட் வொண்டர்லேண்ட்’ (Infinite Wonderland). - படங்கள்: மண்டாய் வனவிலங்கு குழுமம்
‘வேர்ல்டு ஆஃப் டார்க்னஸ்’ (World of Darkness).
‘வேர்ல்டு ஆஃப் டார்க்னஸ்’ (World of Darkness). - படங்கள்: மண்டாய் வனவிலங்கு குழுமம்

‘இன்ஃபினைட் வொண்டர்லேண்ட்’ (Infinite Wonderland) அங்கத்தில் மழைக்காடுகள், பவளப்பாறைகளின் அசாதாரண பல்லுயிர் பெருக்கங்களும் ‘வேர்ல்டு ஆஃப் டார்க்னஸ்’ (World of Darkness) அங்கத்தில் இருண்ட குகைகள், ஆழமான கடலில் வாழும் உயிரினங்களையும் பார்வையாளர்கள் சந்திக்கலாம்.

‘எக்ஸ்ப்ளோரியா’ பல்லூடக கண்காட்சிக்கான வழக்கமான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு S$38. குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு S$28.

நுழைவுச்சீட்டுகளை வாங்கவும், கூடுதல் தகவல்களுக்கும் https://www.mandai.com/en/exploria.html என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்