தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைமுறை பிணைப்பை ஊக்குவிக்கும் சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகத்தின் புதிய விளையாட்டு மைதானம்

2 mins read
918c4dea-c713-4b9b-b43f-82bc5cf4b7e7
‘எ வேல் ஆஃப் எ டேல்’ விளையாட்டு மைதானத்தில் விளையாடும் பிள்ளைகள்.  - படம்: சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம்
multi-img1 of 2

சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகத்தின் 138ஆம் ஆண்டு நிறைவையொட்டி அக்டோபர் 11ஆம் தேதி அன்று தனது முதல் அனைத்து தலைமுறையினரும் விளையாடக்கூடிய ‘எ வேல் ஆஃப் எ டேல்’ (A Whale of a Tale) விளையாட்டு மைதானத்தை மேஜிக்கல் பிரிட்ஜ் அறநிறுவனம் அரும்பொருளகத்தில் உருவாக்கியுள்ளது.

திமிங்கல முள்ளு போல் அமைக்கப்பட்ட இந்த மைதானம், 1900 முதல் 1970 வரை சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புகழ்பெற்ற நீலத் திமிங்கில எலும்புக் கூடு உருவத்தை மீண்டும் கற்பனை செய்து வடிவமைத்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்து வயதினரும் மகிழ பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது ‘எ வேல் ஆஃப் எ டேல்’ மைதானம்.

முதியோர் விளையாடுவதற்கு உடற்பயிற்சிக் கருவிகள், பரபரப்பான சூழலில் அமைதி தேடும் இடமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மறைவுக்குடில் (hideaway hut), தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை ஊக்குவிப்பதற்கு அமைக்கப்பட்ட இருவழித்தொடர்பு சமூக இடம், அன்பை வெளிப்படுத்தவும் உங்கள் எண்ணங்களைப் பற்றிச் சிந்திக்கவும் உருவாக்கப்பட்ட மேஜிக்கல் பிரிட்ஜ் அறநிறுவனத்தின் கனிவன்பு முனை (kindness corner) போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

“எ வேல் ஆஃப் எ டேல் விளையாட்டு மைதானம் சிங்கப்பூரின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் விளையாட்டின் மூலம் ஒன்றிணைக்கிறது,” என்றார் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் இயக்குநர் சுங் மே குவென்.

‘எ வேல் ஆஃப் எ டேல்’ விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு நன்கொடை வழங்கிய மேஜிக்கல் பிரிட்ஜ் அறநிறுவனத்தின் வாரிய உறுப்பினரான அமண்டா கோ ஸ்டெக்லர், “வயது, திறன் போன்றவற்றை விளையாட்டுகளின் மூலம் இணைக்கலாம் என்று நானும் என் கணவர் வின்சும் நம்புகிறோம். அதனால் இது போன்ற முயற்சிகளை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்