தீபாவளித் திருநாள் பிறந்த கதை

1 mins read
3a2fa259-847d-448b-9ad7-603d6cf8a16e
மக்களை ஒன்றிணைத்து, பல்லினத்தோடு நல்லறம் பேணும் திருநாளை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்வோம்! - படம்: செயற்கை நுண்ணறிவு

வணக்கம், பிள்ளைகளே! சிங்கப்பூர் முழுதும் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான தீபாவளியின் வரலாற்றை அறிந்துகொள்வோமா!

தீமையை வென்ற நன்மையைச் சிறப்பிக்கும் இவ்விழா குறித்து பல்வேறு கதைகள் உள்ளன.

அவற்றுள் ஒன்று, நரகாசுரனைக் கிருஷ்ணர் அழித்ததை விவரிக்கிறது.

தான் இறப்பதற்குமுன், தனது மறைவை ஆண்டுதோறும் விளக்குகளுடனும் வண்ணக் கோலங்களுடனும் மக்கள் கொண்டாட வேண்டுமெனக் கிருஷ்ணனரிடம் நரகாசுரன் வரம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

மற்றொரு கதை, ராமாயணத்தின் நாயகனான ராமன், இலங்கை வேந்தன் ராவணனைப் போரில் தோற்கடித்துடன் தொடர்புடையது.

வெற்றிபெற்று அயோத்திக்குத் திரும்பிய ராமனை மக்கள் தீபம் ஏற்றி, வாணங்களை வெடித்துக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.

சமண முனிவரான மகாவீரர் முக்தி அடைந்த நாளையே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

காரணம் எதுவாயினும் மக்களை ஒன்றிணைத்து, பல்லினத்தோடு நல்லறம் பேணும் திருநாளை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்வோம்!

அனைத்துச் செல்லங்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

குறிப்புச் சொற்கள்