சிறுவர்களுக்கான மாபெரும் விற்பனை

சிறுவர்களுக்கான மாபெரும் விற்பனை

1 mins read
00ad6e74-fff4-4ff8-b247-b21169990d39
மலிவு விற்பனை. - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘தகாஷிமாயா’வின் அடித்தளம் இரண்டில், டிசம்பர் 26 வரை கிறிஸ்துமஸுக்காக சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள் பிரம்மாண்டமாக விற்பனை செய்யப்படுகிறது

‘கொவிட்’ காலத்திற்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் இவ்விற்பனைத் திரும்புவது இதுவே முதன்முறை.

சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்களோடு, ஜனவரியில் பள்ளிக்குச் செல்ல பயனாக இருக்கும் பொருள்களை மலிவான விலையில் வாங்க சிறுவர்கள் பெற்றோருடன் சென்று வருகின்றனர்.

அத்தகையோரில் ஒருவரான கலையரசி முருகையன் தன் இரு பிள்ளைகளான 11 வயது கார்த்திகாவையும் 10 வயது கார்த்திகேயனையும் ஒவ்வோர் ஆண்டும் அழைத்து வருவார். இவ்வாண்டும் அதைப் போலவே வந்திருந்தார்.

“இங்கு அவ்வளவு பொருள்கள் இருக்கின்றன. எங்களின் அம்மா எங்களுக்கு கிறிஸ்துமஸுக்காக கொடுத்த பணத்தை எதை வாங்குவது என்றேத் தெரியவி்லை,” என்று வியப்புடன் கூறினார் கார்த்திகா.

‘டிஸ்னி’யின் ‘மிக்கி மவுஸ்’, ‘சூப்பர்மேன்’, ‘பேட்மேன்’ என ‘சூப்பர் ஹீரோ’ சார்ந்த பொம்மைகளும் ‘மோனோபோலி’, ‘லூடோ’ போன்ற பலகை விளையாட்டுகளும் ‘நர்ஃப்’ துப்பாக்கிகள், மின் பொம்மைகள் என பலவகையான பொருள்களும் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை நாளையோடு முடிவடையும்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்

தொடர்புடைய செய்திகள்