மாணவர்களிடத்தில் திறன்களை வளர்க்கும் ‘புரோஜெக்ட் தூண்’

மாணவர்களிடத்தில் திறன்களை வளர்க்கும் ‘புரோஜெக்ட் தூண்’

1 mins read
d228498e-dbd8-4c41-9ed7-654b80bfbc82
புரோஜெக்ட் தூண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள். - படம்: புரோஜெக்ட் தூண்

‘புரோஜெக்ட் தூண்’ மீண்டும் தொடங்கவுள்ளது.

தமிழர் பேரவையும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக மாணவர் குழுவான ‘தமிழா’வும் இணைந்து ஏற்பாடு செய்யும் ‘புரோஜெக்ட் தூண்’ நெடுங்கால சமூக சேவைத் திட்டத்தின் நான்காம் அத்தியாயம் தொடங்கவுள்ளது.

தொடக்கநிலை 5 முதல் உயர்நிலை 2 வரையிலான மாணவர்களுக்கு ‘புரோஜெக்ட் தூண்’, பள்ளி பாடத்திட்டத்தையும் தாண்டி தம் திறன்களையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க வாய்ப்பளிக்கும்.

அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கலை, மொழி சார்ந்த ஆற்றல்களையும் அவர்களிடத்தில் மேம்படுத்தும்.

வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

கொவிட்-19 தொற்றுகாலத்தின்போதும் தொடர்ந்து நடைபெற்று பல பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தேதிகள்: பிப்ரவரி 10 முதல் மே 25 வரை (மொத்தம் 12 அமர்வுகள், சனிக்கிழமைகளில்)

இடம்: கேலாங் வெஸ்ட் சமூக நிலையம் (1205 அப்பர் பூன் கெங் சாலை, சிங்கப்பூர் 387311)

தொடர்புடைய செய்திகள்

கட்டணம்: இலவசம்

பதிவுக்கு: https://tinyurl.com/thoon24

மேல்விவரங்களுக்கு info@trc.org.sg மின்னஞ்சல்வழி தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்