சிறுவர்களுக்கான விண்வெளி அனுபவம்

சிறுவர்களுக்கான விண்வெளி அனுபவம்

படம்: சிங்போஸ்ட் மையம், கிஸ்டோபியா

11 Mar 2024 - 5:48 am

1 mins read

சிங்போஸ்ட் மையம் கிஸ்டோபியாவுடன் இணைந்து வழங்கும் ‘ஜம்ப்டோபியா™ லைட்’ எனும் சிறுவர் கேளிக்கை அனுபவம் மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை சிங்போஸ்ட் மையத்தில் நடைபெறவுள்ளது. விண்வெளி கருப்பொருளை மையமாக வைத்து இந்த மார்ச் மாத கேளிக்கை நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான பல சுவாரசியமான விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் காத்திருக்கின்றன.

 Bell’s Starship Voyager மற்றும் Honey’s UFO Invasion போன்ற விண்வெளி கேளிக்கை விளையாட்டுகள் மூலம் சிறுவர்கள் தொலைதூர கிரகங்கள், சிறுகோள் புலங்கள் மற்றும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை போன்ற விண்வெளி அதிசயங்களை அனுபவிக்கலாம். 

காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் ‘ஜம்ப்டோபியா™ லைட்’ விண்வெளி அனுபவத்தின் நுழைவுச்சீட்டுக் கட்டணம் $12. மேல் விவரங்களுக்கு பொதுமக்கள் https://bit.ly/jumptopialiteXsingpost எனும் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்