பிரதமர் லீ, 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கிறார். எந்த நாட்டிலும் இத்தனை ஆண்டுகள் ஒருவரே பிரதமராக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதற்கு உங்கள் மீதும் உங்கள் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் மீதும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம்.
உலக அரங்கில் சிங்கப்பூரின் பெருமையை உயர்த்திக் காட்டி உள்ளீர்கள். சிங்கப்பூர் மக்களுக்குச் சிறந்த திட்டங்களைத் தீட்டி, மக்கள் எப்போதும் பயமின்றி மகிழ்ச்சியாக வாழ வழிவகுத்திருக்கிறீர்கள்.
‘திரு லீ பிரதமர் பதவியைத்தான் ஒப்படைக்கிறார். தொடர்ந்து அங் மோ கியோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார்,’ என்பதை அறிந்ததும் மகிழ்ந்தேன்.
சாரு சரத் உயர்நிலை 2, பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

