ஒட்டகம் பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

ஒட்டகம் பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்

1 mins read
de8ad755-f2da-479a-ab35-55c3e5460273
படம்: - ஊடகம்
multi-img1 of 3

ஒட்டகம் (கேமல்) என்ற சொல் அரேபிய மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள்படும்.

ஒட்டகங்கள் ஏறக்குறைய 5,000 ஆண்டுகளாக மனிதர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை பொதுவாக சவாரி செய்வதற்கும் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒட்டகங்கள் ஆறு முதல் ஏழு அடி உயரம் வரை வளரும்.

அவற்றின் ஆயுட்காலம் 15 முதல் 50 ஆண்டுகள்.

ஒட்டகங்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்.

ஒரே நேரத்தில் 200 லிட்டர் நீரைக் குடிக்கும் திறன் கொண்டது.

தண்ணீரும் உணவும் இல்லாமல் ஒட்டகங்களால் நீண்ட நேரத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியும்.

உலகில் ஏறக்குறைய 1 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒட்டகங்களால் அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓட முடியும்.

அரேபிய நாட்டில் திருமணங்களின்போது சிறப்பு உணவாக ஒட்டக வறுவல் பரிமாறப்படுகிறது.

பண்டைக்காலத்தில் குதிரைப்படையைப் போல ஒட்டகப்படையும் பல நாடுகளில் இருந்துள்ளது.

கண்களைத் தூசியில் இருந்தும் வெயிலில் இருந்தும் காப்பதற்காக ஒட்டகங்களுக்கு மூன்று கண் இமைகள் உள்ளன.

சூரியனின் வெப்பத்தாக்குதலில் இருந்து பாதுகாக்க அதன் ரோமங்கள் உதவுகின்றன.

மணலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒட்டகங்களின் நாசி துவாரங்கள் மூடப்பட்டு இருக்கும்.

ஒட்டகங்கள் எப்படி தூங்குகின்றன? ஒட்டகப் பாலூட்டிகள் இரவில் ஏறக்குறைய ஆறு மணி நேரம் நின்றபடியே தூங்குகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களிடம் இருந்து ஒட்டகங்களுக்கு அதிக பாதுகாப்பை கிடைக்கிறது.

குறிப்புச் சொற்கள்