விளையாட்டுப் பொருள்களை வைத்து அருங்காட்சியகம்

விளையாட்டுப் பொருள்களை வைத்து அருங்காட்சியகம்

1 mins read
c12dbb0a-7448-41a2-8e68-9d57c69add5b
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் அருங்காட்சியகம் - படம்: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்

சிங்கப்பூர் கலைஞர்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்களைத் தயாரிப்பவர்களின் கூட்டு முயற்சியில் விளையாட்டுப் பொருள்களைச் சேகரித்து கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் உலக அளவில் மற்றும் உள்ளூரில் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 250 விளையாட்டுப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் என்றாலே ஒரு மோகம் இருப்பது இயல்புதான். ஆனால் கைத் தொலைபேசி எப்பொழுது சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்து விளையாட்டுப் பொருள்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் நாட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது. அதனை முறியடிக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையலாம்.

இங்கே பிளே மேட்டின் மின் அவதாரங்களை வைத்து விளையாடும் வாய்ப்பும் ஹாட் வீல்ஸ், பாப் மார்ட் விளையாட்டுப் பொருள்களைக் காணும் வாய்ப்பும் கிட்டும். இது சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் இலவசமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சி.

ஜூலை மாதம் 5ஆம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரையிலும் இந்த அருங்காட்சியகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும். நாள்தோறும் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்து இருக்கும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டு உங்களது நாளை இன்பமாக கழிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்