சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கின்றன.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் இப்பொழுது புதிதாக யானையைச் சந்தித்தல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதிலிருந்து யானைகளை அருகில் பார்க்கும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிட்டும். மற்றும் பார்வையாளர்கள் யானைகளுடன் உறவாடுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஐந்து பெண் ஆசிய யானைகள் எவ்வாறு சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பராமரிக்கப்படுகின்றன என்பதை நேரில் சென்று அறிந்து கொள்ளலாம். இங்கே யானைகள் கேரட், வாழைப்பழம் போன்ற உணவுகள் உண்பதை நேரில் நாம் பார்க்கலாம்.
அத்துடன் யானைகளைப் பற்றிய இன்னும் சுவாரசியமான தகவல்களை நாம் அருகில் இருந்து பார்த்து, அனுபவித்து, தெரிந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 9ஆம் தேதி பகல் 2 மணியிலிருந்து 3 வரை நடைபெறும். வார நாட்களில் $118.40ம் வார இறுதி நாட்களில் $148 இதற்கான கட்டணம் ஆகும்.
அடுத்ததாக சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் விலங்குகளுடன் காலை உணவு உண்ணும் அரிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது. ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்படும். காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், விலங்குகள் செய்யும் வித்தைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பார்த்து மகிழலாம்.
இந்த நிகழ்ச்சியில், கலிபோர்னியா கடல் சிங்கம், ஆப்பிரிக்க பென்குவின், ஓராங்ஊத்தான், பெங்கால் கழுகு ஆந்தை போன்ற விலங்குகளைப் பற்றி பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் முக்கியமாக பெங்கால் கழுகு, ஆந்தை மற்றும் மலாய் மீன் ஆந்தை எவ்வாறு 270 அளவு திசையில் தலையை அசைக்கிறது என்பதை இந்தக் கண்காட்சியில் இருந்து பார்வையாளர்கள் கண்கூடாகப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சிக்கான கட்டணம் குழந்தைகளுக்கு 37 வெள்ளி பெரியவர்களுக்கு 47 வெள்ளி .
சுவாரஸ்யமான விலங்குகளைப் பார்ப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இதுவாகத்தான் இருக்க முடியும்.

