சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நைட் சஃபாரியில் பலதரப்பட்ட வினோதமான விசித்திரமான விலங்குகள் இருக்கின்றன.
இரவில் கண் விழித்திருக்கும் விலங்குகளின் உடல் நலத்தை இங்கு இரவு வேலை செய்பவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார்கள்.
ஆசிய யானைகள் மற்றும் இந்திய ரைனோசரஸ் போன்ற பெரிய விலங்குகளை நைட் சஃபாரியில் பார்த்திருப்பீர்கள். ஆனால் சிறு சிறு விலங்குகளை இரவில் பார்த்ததுண்டா?
தென்னாட்டு ஆர்மடில்லோ, தன் சுய தற்காப்புக்காக ஒரு பந்தைப்போல் சுருட்டிக் கொள்ளும்.
இந்திய கிரிஸ்டட் முள்ளம்பன்றி, முயலுடைய காதுகள் மற்றும் கங்காருவின் வாலை கொண்ட ஆர்ட்வாக். ஆர்ட்வாக் என்றால் ஆப்பிரிக்க மொழியில் பூமி பன்றி என்று அர்த்தம்.
இதுபோன்ற வினோதமான, விசித்திரமான சிறு சிறு விலங்குகளைக்கூட இந்த நைட் சஃபாரியில் பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் 24, 31 தேதிகளில் இரவு 7.30 மணியிலிருந்து 9.30 மணி அளவில் கிழக்குப் பகுதியில் இதுபோன்ற சிறு விலங்குகளைச் சந்திக்கலாம்.
வைல்டு அட்டையை வைத்திருக்கும் சிங்கப்பூரர்கள் நுழைவு சீட்டுகளில் 30% தள்ளுபடி அனுபவிக்கலாம். வெறும் $215 இல் உங்களுடைய ஓராண்டுக்கான அனுமதி சீட்டைப் நீங்கள் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதை வைத்து நீங்கள் மண்டாய் வனவிலங்கு காப்பகம், பறவைப் பூங்கா, நைட் சஃபாரி, ரிவெர் வொண்டர்ஸ், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் போன்ற இடங்களுக்குச் சென்று மகிழலாம். 13லிருந்து 17 வயது சிறுவர்களுக்கு கழிவு விலையில் நுழைவுச் சீட்டுகளைப் பெறலாம்.
பந்தைப் போல சுருட்டிக்கொள்ளும்
தென் அமெரிக்காவின் புதர்களில் ஊர்ந்து செல்லும் ஒரு விசித்திரமான உயிரினம்தான் ஆர்மடில்லோ. கவசம் போன்ற தோள் அமைப்பை கொண்டது. ஆர்மடில்லோக்கள் பூச்சிகள், புழுக்கள், தாவரங்கள் மற்றும் சிறிய விலங்குகளை உண்ணும். நீண்ட ஒட்டும் நாக்கால் தரையில் உள்ள உணவுகளை எடுத்து உண்ணும். சில இனங்கள் இரும்புகள் மற்றும் தேனீக்களை வேட்டையாடுவதில் திறமையானவை. பெண் ஆர்மடில்லோ 1 முதல் 8 குட்டிகளை ஈனும். இந்தக் குட்டிகள் பிறந்த சில மணி நேரங்களில் நடக்கவும் உண்ணவும் ஆரம்பித்துவிடும்.
பாதுகாப்புக்கு முட்களை பயன்படுத்தும்
ஒரு முள்ளம்பன்றியின் உடலில் சுமார் 30,000 வரை முட்கள் இருக்குமாம். மற்ற விலங்குகள் நெருங்குகிற நேரங்களில் தங்களைப் பாதுகாக்க முட்களைக் கொண்டு தாக்குகின்றன.
முள்ளம்பன்றிகள் குழி தோண்டி குகை போன்ற இடங்களில் வசிக்கின்றன. பகல் நேரங்களில் உறங்கி இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடுகின்றன.
ஏழு மாதங்களிலிருந்து பத்து மாதங்களுக்குப் பிறகு குட்டிகள் தனித்து வாழ ஆரம்பிக்கின்றன. வனப்பகுதிகளில் வசிக்கும் முள்ளம்பன்றிகள் 13 முதல் 18 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
பாதுகாப்புக்கு குழிதோண்டி பதுங்கும்
ஆர்ட்வாக் பன்றி போன்ற முகம், பருத்த உடல். வாலால் தட்டி மனிதா்களைக் கூட கீழே தள்ளி விடும் வலிமை கொண்டது. இதன் முக்கிய உணவு கரையான் ஆகும். இதற்கு ‘எறும்புக் கரடி’ என்றும் பெயா் உண்டு.
புழு போன்ற நீளமான சிவந்த நாக்கு இதற்கு உண்டு. இது இரவில் மட்டும் தான் வெளிவரும். பகலில் தனது வளைகளில் பதுங்கிக் கிடக்கும். இது வேகமாக மண்ணைத் தோண்டும்.
இது எதிாிகள் நெருங்கி வந்தால் அவற்றின் கண்முன்னே குழி தோண்டி ஒளிந்து கொள்ளும். இதற்கு முக்கிய
எதிாி மலைப்பாம்புகள்.