அறிவியல் நிலையத்தில் புத்தம் புதிய நிகழ்ச்சிகள்

அறிவியல் நிலையத்தில் புத்தம் புதிய நிகழ்ச்சிகள்

2 mins read
447b4709-c526-4359-98b4-bf3a1427f97e
சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் மாத இறுதிவரை பல்வேறு நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் 2024 ஆகஸ்ட் மாத இறுதிவரை சுவாரசியமான, ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கின்றன.

1. பாலர் பள்ளி மாணவர்களுக்கான தேசிய எந்திரனியல் (Robotics) போட்டி

நாள்: படைப்பு - ஆகஸ்ட் 19 - 20, செயல்முறை - ஆகஸ்ட் 26 - 27

நுழைவுச்சீட்டு: ஒரு குழுவிற்கு $30 

வயது: 5 - 6

விளையாட்டுத்திடலில் சவால்களை நிறைவேற்றும் வகையில் இயந்திர மனிதனுக்கான நிரலை எழுதி, கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.

2. கருப்பொருள் அறையிலிருந்து தப்பியுங்கள்!

நாள்: இப்போது நடைபெறுகின்றது

நேரம்: திங்கள் - வியாழன் & ஞாயிறு காலை 10 - மாலை 5.45

வெள்ளி மற்றும் சனி காலை 10 - இரவு 8.15

நுழைவுச்சீட்டு: $20 முதல் 

வயது: 13 வயதும் அதற்கும் மேற்பட்டோர்

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்றவற்றுடன் உங்கள் அறிவைப் பயன்படுத்தி மூன்று கருப்பொருள் அறைகளிலிருந்து தப்பிக்கவும்!

3. நம் தோட்டத்தில் வாழ்க்கை

நாள்: ஆகஸ்ட் 25 வரை (வார இறுதி, பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாள்களில் மட்டும்)

நேரம்: மாலை 3.30 - 4

நுழைவுச்சீட்டு: $5 (அறிவியல் மையத்தின் நுழைவுச்சீட்டை இது சேர்க்காது)

வயது: 5 வயதும் அதற்கும் மேற்பட்டோர்

தோட்டத்தில் பூக்கும் மனங்கவர் மலர்கள் பற்றியும் அங்குள்ள சிற்றினங்கள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.

4. குறிமுறையாக்க ஒலிம்பிக் 2024

நாள்: ஜூலை 30-ஆகஸ்ட் 4

நுழைவுச்சீட்டு: பிரிவு A மற்றும் B - $69, பிரிவு C - $59

வயது: 8-12

உங்கள் பிள்ளைகளின் ‘குறிமுறையாக்க’ (Coding) பயணத்தைத் தொடங்குங்கள். அவர்களின் படைப்பாற்றலையும் சிந்தனைத் திறனையும் வளர்க்க தளம் அமைத்துக் கொடுங்கள்.

அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்யும் வேறு சில நடவடிக்கைகளிலும் மாணவர்கள் பங்கெடுக்கலாம்.

1. நான் ஓர் இளம் விஞ்ஞானி அடையாள வில்லை

அறிவியல் நிலையத்தின் இணையத்தளம் வழியாக ‘நான் ஓர் இளம் விஞ்ஞானி அடையாள வில்லை’ (I am a young scientist badge) நடவடிக்கையில் ஈடுபடலாம்.

தன்னியக்க நடவடிக்கைகள் மூலம் பத்து அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த தலைப்புகளை உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து ஆராயுங்கள். நிறைவுசெய்ததும், சான்றிதழும் இளம் விஞ்ஞானி அடையாள வில்லையும் வழங்கப்படும்.

2. அறிவியல் சேவை

நமது துணிச்சலான கல்வியாளர்கள், அறிவியலின் பெயரில் அசாதாரண விளையாட்டுகளை  ஆடுவதைப் பார்த்து சிரிக்கத் தயாராகுங்கள்! யூடியூப் தளத்தில் சிங்கப்பூரின் அறிவியல் நிலையத்தின் புதிய கல்வி நிகழ்ச்சித் தொடரைப் பாருங்கள்.

குறிப்புச் சொற்கள்