ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா, ஆகஸ்ட் 11 வரை, இல்லுமினேஷனின் ‘டிஸ்பிக்கபல் மீ 4’ படம் வெளியிட்டதை கொண்டாடுகின்றது.
ஜூலை 4 வெளியிடப்பட்ட ‘டிஸ்பிக்கபல் மீ 4’ யூனிவேர்சல் சூடியோஸ்வில் பல புதிய நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.
பல நடவடிக்கைகள், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் புகைப்படம் எடுப்பது, நடன நிகழ்ச்சிகள், பாட்டு நிகழ்ச்சிகள், போன்றவற்றை கண்டு மகிழலாம்.
‘மினியன்ஸ்’ சார்ந்த உணவுகளை சுவைத்து, பொருள்களை வாங்கி, மாணவர்கள் மகிழலாம்.
2010இல் முதல் முறையாக வெளியிடப்பட்ட ‘டிஸ்பிக்கபல் மீ’, அதன் பிறகு மூன்று படங்களை வெளியிட்டுள்ளது. மினியன்ஸ், என்ற கதாபாத்திரத்தை பிரபலப்படுத்திய இப்படங்கள், ‘குரு’ என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கிறது.
உலகத்தில் இருக்கும் படம் பட்டியலில், ‘டிஸ்பிக்கபல் மீ’ வழங்கிய நான்கு திரைப்படங்கள், சிறந்த,அனிமேஷன் எனப்படும் இயங்கு படமாக இடம்பிடித்துள்ளது. மினியன்ஸ் மற்றும் ‘டிஸ்பிக்கபல் மீ 3’ ஆகிய இரண்டும் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.
ஒரு ‘மெகா டிஸ்பிக்கபல்’ தொகுப்பு, யூனிவேர்சல் ஸ்டுடியோஸ்க்கு செல்லக்கூடிய வழக்கமான நுழைவுசீட்டுகள் வழங்கப்படும். நுழைவுசீட்டுகள் பெரியவர்களுக்கு $74 முதல் விற்கப்படும், குழந்தைகளுக்கு $59 முதல் விற்கப்படும்.
ஜூன் 10 முதல், நுழைவுசீட்டுகளுடன் $5 உணவு சீட்டும், $5 பொருள்கள் வாங்கும் சீட்டும் வழங்கப்படும்.