தாள்களில் வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களை வரையலாம். ஆனால், உண்மை உலகில் பொருள்கள் முப்பரிமாண (3D) வடிவில் நமக்குத் தோன்றுகின்றன. முப்பரிமாண பொருள்களுக்கு நீளம் (length), அகலம் (breadth), உயரம் (height) ஆகிய மூன்று வகையான அளவுகள் உள்ளன.
கோளம் (sphere): வட்டத்தின் முப்பரிமாண வடிவம்தான் கோளம். காற்பந்து முதல் நம் பூமி வரை பல்வேறு பொருள்கள் கோள வடிவில் உள்ளன.
கனசதுரம் (cube): பெட்டிகள் பல, கனசதுர வடிவில் இருக்கும். மாணவர்கள் விரும்பி விளையாடும் ‘ரூப்ரிக்’ கருவியும் இந்த வடிவில் இருக்கும்.
உருளை (cylinder): பீப்பாய்கள் (barrels), கிண்ணங்கள் போன்ற பொருள்கள் உருளை வடிவில் இருக்கும்
கூம்பு (cone): முக்கோணம் (triangle) போலக் காணப்படும் வடிவம். வட்டமான அடிப்பக்கத்திலிருந்து உச்சியை (peak) நோக்கிச் சாய்வாக (sloping) அமைந்துள்ள முப்பரிமாண வடிவமாகும். பனிக்கூழைக் (ice-cream) கூம்பு வடிவங்களில் பரிமாறுவது வழக்கம்
பட்டைக்கூம்பு (pyramid): பண்டைய எகிப்தியர்கள் பட்டைக் கூம்புகளைப் பயன்படுத்தினர். போரோ எனப்படும்

