ஹைதராபாத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5 லட்சம் பேர் நீக்கம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியபோது, “ஹைதராபாத் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 201 பேர் மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் 47,741 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 39 ஆயிரத்து 801 பேர் இன்னபிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். 54 ஆயிரத்து 259 பேர் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

“இந்தப் பெயர்கள் அனைத்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

“தவறாக இருந்த 1 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேரின் வீட்டு முகவரிகள் சரி செய்யப்பட்டுள்ளன,” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!