எழுச்சி 2.0: சிங்கப்பூரர் அடையாளம் குறித்துப் பேசிய இளையர்கள்

எழுச்சி 2.0: சிங்கப்பூரர் அடையாளம் குறித்துப் பேசிய இளையர்கள்

1 mins read
a450f8e9-b406-4480-8b89-3823ca1568a1
மே 16ஆம் தேதி நடந்த ‘எழுச்சி 2.0’ இளையர் அரங்கில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 70 இளையர்கள் பங்கேற்றனர். - படம்: தமிழர் பேரவை, மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

சிங்கப்பூரின் தேசிய அடையாளம், பல்லினப் பன்முகக் கலாசாரச் சவால்கள் ஆகியவற்றை குறித்து இளையர்கள் விவாதிக்க, ‘செமாங்காட் 2.0’ அதாவது ‘எழுச்சி 2.0 - இளையர் குரல்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழர் பேரவையும் மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் இணைந்து அந்த இளையர் அரங்கை நடத்தின.

மே 16ஆம் தேதி நடந்த அந்தக் கலந்துரையாடலில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 70 இளையர்கள் பங்கேற்றனர்.

சிங்கப்பூரின் பன்முகத்தன்மை கொண்ட பல்லினச் சமுதாயத்தில் தங்களின் அடையாளம், சமூக நல்லிணக்கம், பிணைப்புணர்வு ஆகியவை குறித்து அவர்கள் வெளிப்படையாகக் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக். - படம்: தமிழர் பேரவை, மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

இளையர்களுக்குப் பயனுள்ள பல கருத்துகளை வழங்கியதோடு, அனைவரையும் உள்ளடக்கிய, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்குவதில் துடிப்பாகப் பங்காற்ற வேண்டும் என இளையர்களைத் திரு ரசாக் ஊக்குவித்தார்.

சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பை வடிவமைக்கும் இத்தகைய கலந்துரையாடல்களில் இளையர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் புதிய சிந்தனைகளை விரிவுபடுத்தவும் முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், அத்தகைய பாதுகாப்பான, ஆக்ககரமான தளங்களை அமைத்துக் கொடுப்பது மிகவும் அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்