தலைப்புச் செய்தி

மூத்த சிங்கப்பூரர்கள் துடிப்புடன் $3 பில்லியன் திட்டம்
27/08/2015

மூத்த சிங்கப்பூரர்கள் துடிப்புடன் வாழ உதவும் வகையில் $3 பில்லியன் மதிப்பிலான ஐந்து ஆண்டு திட்டத்தை மூப்படை தலுக்கான அமைச்சர்நிலைக் குழு நேற்று அறிமுகப்படுத்தியது.

சிங்க‌ப்பூர்

அமைச்சர் சண்முகம்: ஒரு நகரமன்றம் பற்றாக்குறையில் போனது போதாதா?
27/08/2015

சிங்கப்பூர் அரசாங்கத்தை யார் திறம்பட நிர்வகித்து நடத்த முடியுமோ அவர்களுக்கு வாக்கு அளிப்பதே முக்கியமானது என்று சிங்கப்பூரர்களிடம் வெளியுறவு அமைச்சர் கா சண்முகம் வலியுறுத்தி கூறி இருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள்
27/08/2015

எதிர்த்தரப்புக் கட்சியான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மேலும் இரண்டு வேட்பாளர்களை நேற்று அறிமுகப்படுத்தியது. திருவாட்டி ஜோஸ்லின் கோ, டாக்டர் பால் தம்பையா ஆகியோர் அந்த இரண்டு பேர். இயோ சூ காங்கில் இருக்கும் கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய கட்சியின்

இந்தியா

40 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்த ‘மலை மனிதர்’
27/08/2015

தனியொரு ஆளாக, 22 ஆண்டுகளாக 25 அடி உயரத்திற்கு மலையைக் குடைந்து 360 அடி நீளம், 30 அடி அகலத்திற்குச் சாலை அமைத்த ‘மலை மனிதர்’ என அழைக்கப்படும் பீகார் மாநிலத்தின் தஸ்ரத் மாஞ்சியைச் சிறப்பிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்படும் என இரு நாட்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்தது.

குஜராத்தில் பதற்றம்; நான்கு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு
27/08/2015

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலின்கீழ் அரசாங்க வேலைகளி லும் பள்ளிகளிலும் தங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி பட்டேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டங்களால் இந்தியா வின் குஜராத் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பதற்றநிலை நிலவுகிறது.

வாழ்வும் வளமும்

ரசகுல்லா இனிப்பிற்காக சண்டை போடும் வங்காளம், ஒடிசா மாநிலங்கள்
27/08/2015

திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு வரிசையில் புகழ்பெற்றது கோல்கத்தா ரசகுல்லா. ஆனால், இந்த இனிப்பு எந்த மாநிலத்துக்குச் சொந்தமானது என்பதில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

24/08/2015

காலையில் சாப்பிடும் உணவுகளில் தென்னிந்திய உணவான இட்லிதான் சிறந்த உணவு என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. காலையில் சாப்பிடப்படும் மற்ற உணவுகளைக் காட்டிலும் பன்மடங்கு சத்து இட்லியில் உள்ளது என்கிறது அந்த ஆய்வு.

உல‌க‌ம்

பெர்சே: திட்டமிட்டபடி வார இறுதியில் பேரணி
27/08/2015

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பெர்சே பேரணி சட்டவிரோதமானது என்று போலிசார் அறிவித்துள்ள போதிலும் பேரணி திட்டமிட்டபடி அவ்விரு நாட்களில் நடைபெறும் என்று பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறியுள்ளார்.

மலேசியாவின் பொருளியலை வலுப்படுத்த சிறப்பு பணிக்குழு
27/08/2015

கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியலை வலுப்படுத்துவதற்கு 9 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

27/08/2015

பெய்ஜிங்: சீனாவில் நடந்து வரும் 15வது உலக திடல்தடப் போட்டிகளின் 4வது நாளில் பெண்களுக்கான வட்டெறிதல் போட்டி நடந்தது. நடப்பு வெற்றியாளரும் ஒலிம்பிக் வெற்றியாளருமான குரோவே‌ஷியாவின் சாண்ட்ரா பெர்கோவிச்தான் இம்முறையும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

27/08/2015

பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங்கில் நடந்து வரும் உலக திடல்தடப் போட்டிகளில் பெண்களுக்கான ‘ஸ்டீப்பிள்சேஸ்’ எனப்படும் 3,000 மீட்டர் நீர், நில தடையோட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக இந்தியப் பெண் ஒருவர் தகுதிபெற்றுள்ளார்.

திரைச்செய்தி

சவாலை சந்திக்கும் படக்குழு
27/08/2015

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘சவாலே சமாளி’. இப்படத்தை கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி உள்ளார். பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்க, தமன் இசையமைத்துள்ளார்.

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை
27/08/2015

“உடல் நலனை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உணவைப் பற்றிய விழிப்புணர்வையும், உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்த வேண்டும்,” என்கிறார் சித்தார்த்.