முறையற்ற பணிநீக்கத்திற்காக ஆறு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

முறையற்ற பணிநீக்கத்திற்காக ஆறு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

1 mins read
52e1fac7-aac0-4f7d-9bba-d478e258ec69
ஆறு வழக்குகளிலும் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. - படம்: பிக்சாபே

நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்கள் மருத்துவக் காப்புறுதித் திட்டக் கோரிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக 40 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்களில் அறுவர் முறையற்ற வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வேலைவாய்ப்புச் சச்சரவுத் தீர்ப்பு மன்றம் கண்டறிந்துள்ளது. அந்த அறுவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆறு வழக்குகளிலும் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) வெளியிடப்பட்ட தீர்ப்பில், சம்பந்தப்பட்ட ஊழியர், நிறுவனத்தின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், துல்லியமான இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது விவரிக்கப்படவில்லை. வேலைவாய்ப்புச் சச்சரவுத் தீர்ப்பு மன்றத்தின் வழக்குகளில் பெயர்களைக் குறிப்பிடாமல் ரகசியமாக வைத்திருக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளதுதான்.

இருப்பினும், தீர்ப்பாய நீதிபதி அந்த அறுவரில் திருவாட்டி சி என்று மட்டும் குறிப்பிடப்பட்ட ஒருவரின் விவரங்களில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். அவருக்கு 17,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்