சுவிட்சர்லாந்து நாணயத்தில் அதிக நாட்டம் செலுத்தும் சிங்கப்பூரர்கள்

சுவிட்சர்லாந்து நாணயத்தில் அதிக நாட்டம் செலுத்தும் சிங்கப்பூரர்கள்

1 mins read
d2039ad7-afd7-4460-b85c-5e3c82b05ff8
சுவிட்சர்லாந்து நாணயத்தின்மீது சிங்கப்பூரர்களின் நாட்டம் அதிகரித்துள்ளது. - படம்: இபிஏ

சிங்கப்பூரர்களில் பலர் சுவிட்சர்லாந்து நாணயத்தை அதிகளவில் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

அனைத்துலகப் பொருளியலில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் வர்த்தகத் தளங்களில் பலர் சுவிட்சர்லாந்து நாணயத்தை அண்மைய ஆண்டுகளில் வாங்குவதைக் காண முடிகிறது என்று வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

அனைத்துலக அளவில் பாதுகாப்பான நாணயம் என்ற தனித்துவத்தைப் பெற்ற சுவிஸ் ஃபிராங் நாணயம் சிங்கப்பூரர்களிடையே பிரபலமடைந்துள்ளது.

தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களின் விலை கடுமையாக ஏறி இறங்குவதாலும் மக்கள் சுவிட்சர்லாந்து நாணயத்தில் அதிக முதலீடு செய்வதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூரர்கள் வர்த்தகத் தளங்களில் பயன்படுத்திய சுவிட்சர்லாந்து நாணயம் $380.26 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அது 2025 நடுப்பகுதிக்குள் $1.05 பில்லியனாக அதிகரித்தது.

ஒட்டுமொத்தத்தில் சுவிட்சர்லாந்து நாணயத்தின் வர்த்தகம் 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு 22.21 விழுக்காடு உயர்ந்தது.

இவ்வாண்டும் சுவிட்சர்லாந்து நாணயத்தின் பயன்பாடு வர்த்தகத் தளங்களில் அதிகரித்தது.

மே 17ஆம் தேதி சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான சுவிட்சர்லாந்து நாணயம் 0.61 ஃப்ரான்காக இருந்தது.

கடந்த ஆண்டு ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான சுவிட்சர்லாந்து நாணயம் 7.81 விழுக்காடாக அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்