சொந்த தங்கையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இளையவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 14 வயதாகிறது.
அந்தச் சிறுமியை அவரது நான்கு சகோதரர்களும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.
இந்நிலையில், அந்தச் சகோதரர்களில் ஆக இளையவருக்கு ஜூலை 3ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை அந்த 19 வயது இளையர் மார்ச் 12ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பளிக்கப்பட்டபோது அந்த இளையவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.
தங்கள் மகனுடன் பேச அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட இளையருக்கு மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தமது தங்கையை அவர் குறைந்தது ஏழு முறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையானதாகவும் அதன் காரணமாக தமது தங்கையைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எட்டு முதல் 12 வயதாக இருந்தபோது அச்சிறுமி பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டார்.
அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மற்ற சகோதரர்களுக்கு தற்போது 20 வயது முதல் 23 வயதாகிறது.
அவர்களுக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.

