You are here

தலைப்புச் செய்தி

கடற்பகுதியைப் பாதுகாக்கும் அதிரடிப் படையினர்

சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் 180வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சிறிய குழுக்களாக கப் பல்களுக்குள் சென்று பாதுகாப்பை உறுதி செய்துவருகின்றனர். அந்தக் கப்பல்கள் கடற்கொள் ளையர்கள் அல்லது பயங்கரவாதி களின் ஆதிக்கத்தில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே அவர்களின் நோக்கம். முழு சீருடையுடன் உள்ள அப்படைப்பிரிவினர் பல்வேறு ஆயுதங்களை ஏந்தி முழு தயார் நிலையில் இருப்பார்கள். “ஒரு கப்பலில் ஏறும்போதும் எங்களால் எங்கும் ஓடமுடியாது. வெளியிலிருந்து உதவி வரும்வரை யில் எங்களை நாங்களே தற்காத் துக்கொள்ள வேண்டும்,” என்று அப்படைப்பிரிவின் தலைவர் லெஃப்டினென்ட் கர்னல் நிக் நியோ கூறினார்.

விமான விபத்தில் பெண் மாண்ட விதம் குறித்து பயணிகள் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் பதிவு செய் யப்பட்ட சௌத்வெஸ்ட் ஏர் லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் விபத்தில் சிக்கி யதைத் தொடர்ந்து அதன் நிர்வாகம் சோதனைகளை அதிகப்படுத்தி வருகிறது. பென்சில்வேனியா நக ருக்கு மேல் சுமார் 32,500 அடி உயரத்தில் நேற்று முன் தினம் பறந்துகொண்டிருந்த போது அந்த விமானத்தின் இயந்திரத்தில் வெடிப்பு ஏற் பட்டது. அப்போது அந்த விமானத் தில் 149 பேர் இருந்தனர். டாலஸ் நகரில் இருந்து நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தை நோக்கி அந்த விமானம் சென்றுகொண்டி ருந்தது. இயந்திரம் வெடித்த நேரத் தில் பெண் பயணி ஒருவர் பாதியளவு வெளியே இழுக்கப்பட்டு மாண்டார்.

பொருளியல் உருமாற்றத்தின் அடுத்த கட்டத்தில் உலக ஆசிய மையப்புள்ளியாக சிங்கப்பூர்

பொருளியலைத் தூக்கிவிடத் துணைபுரியும் தொழிற்துறை களைக் குழுக்களாக ஒன்றி ணைத்து அவற்றுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதே சிங் கப்பூர் பொருளியல் உருமாற்றத் தின் அடுத்த கட்டம் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார். ஆசியாவிலும் உலகளவிலும் தொழில்நுட்பம், புத்தாக்கம், நிறு வனமயம் ஆகியவற்றுக்கான முக் கியதொரு மையப்புள்ளியாக சிங் கப்பூரை நிலைநிறுத்துவதே உரு மாற்றத்தின் நோக்கம் என் றார் அவர்.

பஃப்ளோ சாலையில் பூக்கடைக்குள் கார் புகுந்தது; ஊழியருக்கு இலேசான காயம்

படம்: சுரேஷ்

எஸ். வெங்கடேஷ்வரன்

பூக்கடைக்காரர் குமார், 47, வழக்கம்போல் மதிய உணவுக்குப் பிறகு கடைக்குத் திரும்பியபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். பஃப்ளோ சாலையில் அமைந்துள்ள நல்லி பிரைவேட் லிமிடெட் கடைக்கும் கோமள விலாஸ் உணவகத்திற்கும் வெளியே அமைந்துள்ள அவரது பூக்கடை அலங்கோலமாகக் கிடந்தது. லிட்டில் இந்தியாவில் நேற்று பிற்பகல் இரண்டு மணி அளவில் நிகழ்ந்த ஒரு விபத்து, அங்கிருக் கும் கடைக்காரர்களை அதிரவைத் தது. ரேஸ் கோர்ஸ் சாலையை நோக்கிச் செல்லும் பஃப்ளோ சாலையில் இருக்கும் பூக்கடை ஒன்றுக்குள் ஒரு கார் கட்டுப் பாட்டை இழந்து புகுந்துவிட்டது.

தமிழை ரசிக்க செய்த நகைச்சுவை பயிலரங்கு

படம்: இந்திய மரபுடைமை நிலையம்

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக கடந்த எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இந்திய மரபு டைமை நிலையம் ஒரு நகைச் சுவைப் பயிலரங்குக்கு எற்பாடு செய்திருந்தது. நகைச்சுவையின் பல நுணுக் கங்களைக் கற்றுக்கொள்வதோடு பங்கேற்பாளர்களை இயல்பான பேச்சுத் தமிழில் கலந்துரையாட வைப்பதே இப்பயிலரங்கின் நோக்கமாகும். இந்த நகைச்சுவை பயிலரங்கை அவாண்ட் நாடகக் குழு வழி நடத் தியது.

புது பாணி விளையாட்டுத் திடல்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் குடியிருப்புப் பேட்டைகளில் சமூகப் பிணைப்பைப் பலப்படுத்தும் முயற்சியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய விளையாட்டுத் திடல்களை வடி வமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. அந்தத் திடல்கள், அக்கம்பக்கத்தின் பாரம்பரியத்தை, வரலாற்றைக் கருப்பொரு ளாகக் கொண்டிருக்கும். வீவக, தன்னுடைய விளையாட்டுத் திடல்கள் வடிவமைப்பைப் படிப்படியாக மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 60களில் அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடல்கள் பல பரிணாமங் களைப் பெற்று அண்மைய ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் உள்ள பல தலைமுறை களுக்குப் பொருத்தமான வகையில் மாற்றம் கண்டுவந்துள்ளன.

அதிபர் டிரம்ப்: சிரியா மீது தாக்குதல் தொடரும்

“ரசாயன ஆயுதங்கள் பயன் படுத்தப்படுவதை சிரியா நிறுத்தும் வரை அமெரிக்காவின் தாக்குதல் தொடரும்,” என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை இலக்காகக் கொண்டு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார். தக்க பாடம் கற்பிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் நேற்று அதிகாலை சிரியா மீது ஆகாயத் தாக்குதலை நடத்தின.

புத்தாண்டு குதூகலத்தில் லிட்டில் இந்தியா

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஹம்மது ஃபைரோஸ்

விளம்பி சித்திரைப் புத்தாண்டை இன்று குதூகலத்துடன் வரவேற்க நேற்று லிட்டில் இந்தியாவில் ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பலகாரங்கள், காய் கறிகள், உணவு என பண்டிகைக் குத் தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர். நேற்று வாரநாளாக இருந்த போதிலும் அந்த வட்டாரமே பரபரப்பாகக் காட்சியளித்தது. எங்கும் மக்கள் கூட்டத்தையும் வாகனங்களின் நீண்ட வரிசை யையும் காண முடிந்தது.

கிராப்- ஊபர் இணைப்பைத் தடுக்க தற்காலிக நடவடிக்கைகள்

ST PHOTO: KUA CHEE SIONG

சிங்கப்பூரில் ஊபர் நிறுவனத்தின் தொழில் உரிமையை கிராப் நிறுவனம் எடுத்துக்கொள்வதைத் தடுத்து நிறுத்துவதற்கான இடைக் கால நடவடிக்கைகளை சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ஊபர் நிறு வனத்தின் தென்கிழக்கு ஆசிய தொழில் உரிமையை கிராப் நிறு வனம் கையகப்படுத்துவது பற்றி தான் நடத்தும் புலன்விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால நடவடிக்கைகள் நடப்பிலிருக்கும் என்று அறிக்கை மூலம் ஆணையம் நேற்று தெரிவித்தது.

இந்தியப் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பலத்த எதிர்ப்பு

சென்னையை அடுத்த திரு விடந்தையில் ராணுவத் தள வாடக் கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக நேற்று காலை சென்னை சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அவரைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வரவேற் றனர்.

Pages