You are here

இளையர் முரசு

தமிழ்த் திறன் வளர்த்த போட்டிகள், பட்டிமன்றம்

படம்: ஃபிரண்டியர் இந்தியர் நற்பணி செயற்குழு

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தமிழ்த் திறனை வளர்க்கும் நோக்கில் சிறுகதை, கட்டுரை எழுதும் போட்டியை நடத்தியது ஃபிரண்டியர் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழு. அதில் பங்கேற்ற மாணவர் களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கும் விழா சென்ற ஜூலை மாதம் 29ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ‘வாழ்வின் வெற்றிக்குத் தேவை முதுமையின் அனுபவமே! இளமையின் துடிப்பே!’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடத்தப்பட்டது.

அணிவகுப்பில் கொடி ஏந்தும் கிஷன்

முதன்முறையாக தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதுடன் எடுத்த எடுப்பிலேயே முன்னிலையில் கொடியேந்தி அணிவகுத்துச் செல் வது 25 வயது கிஷன்ராஜ் முருகையாவுக்கு பெருமைமிகு அனுபவமாக அமைந்துள்ளது. ஆகாயப்படையின் 123வது படைப் பிரிவின் துணைத் தலைவர் பதவி வகிக்கும் கிஷன், மூன்று கிலோ எடையுள்ள கொடியை பிரதமர், அதிபர் ஆகிய முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் சுமந்து செல்வது சுலபமானது அல்ல என்றார். “குறிப்பாக, வந்தனம் செய்வதற்குக் கொடியைக் கீழே இறக்க கைகள் வலுவாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய சூ‌ஷி வகையை உருவாக்கிய ராம் குழுவினர்

செய்தி: ரவீணா சிவகுருநாதன் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மாகி சான் நிறுவனம்

ஸ்பெக்ட்ரா உயர்நிலைப்பள்ளி யைச் சேர்ந்த ராம் நாயுடு சீனிவாசகன், 14, தனது நண்பர் களுடன் இணைந்து தேசிய தினக் கொண்டாட்டத்தை முன் னிட்டு ‘சூ‌ஷி’ உணவு வகை ஒன்றை உருவாக்கியுள்ளார். பள்ளியின் சமையற்கலைச் சங்கத்தில் இருக்கும் இம் மாணவர்கள், சென்ற ஆண்டு சிங்கப்பூர் அறிவாலயம் ஏற்பாடு செய்திருந்த இளம் தொழில் முனைவர் போட்டியில் ‘லக்சா’, ‘ஓட்டா’, ‘கோழி சார் சியூ சூ‌ஷி’யை உருவாக்கியதற்காக மூன்றாம் பரிசை வென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி, ‘மாகி சான்’ என்ற உள்ளூர் சூ‌ஷி உணவகத்துடன் தொடர்பு கொண்டு கூட்டணி ஏற்படுத்த முனைந்தது.

வலுவான நட்புக்கு வழிவகுத்த அணிவகுப்பு சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி மாணவி

‌ஷிபியா ஜுட்ஸ் ராபின், கிரெசென்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி திருநாவுக்கரசு ஹர்‌ஷினி ஆகிய இருவருக்கிடையே நெருக்கமான நட்புறவு வளர்த்துள்ளது இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மேற்கொள் ளப்படும் ஒத்திகைகள். தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்வது இரு வருக்கும் இது முதல்முறை. சென்ற மே மாதம் முதல் மேற்கொள் ளப்படும் ஒத்திகைகளின்போதுதான் இவ் விருவரும் சந்தித்தனர். ஒவ்வோர் ஒத்திகையின்போதும் இருவருக் கிடையே நட்பு வளர்ந்தது. புதிய அனுபவத்தையும் அவர்களுக்கு வழங்கியது அணிவகுப்பு.

அர்ப்பணிப்பு, உற்சாகம், கொண்டாட்டம்...

படம்: திமத்தி டேவிட்

அரங்கத்தில் குழுமும் பார்வையாளர் களைப் பல்வேறு அங்கங்கள் உற்சாகப்படுத்தினாலும் அந்த உற் சாகம் இறுதிவரை எள்ளளவும் குறையாமல் பார்த்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங் கேற்கும் ஊக்குவிப்பாளர்கள். பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த இந்த இளம் ஊக்குவிப் பாளர்கள், கைகளை அசைத்தும் பலமொழிகளில் உள்ள தேசப்பற்று பாடல்களைப் பாடியும் கூட்டத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவ்வப்போது செய்துகாட்டுகின்றனர். அரங்கத்தினுள் ஆங்காங்கே நின்று கொண்டாட்டத்தின்போது கலகலப்பாகவும் புன்னகை மாறா முகங்களுடனும் இந்த இளம் ஊக்குவிப்பாளர்கள் காணப் படுவது அவசியம்.

Pages