You are here

சிங்க‌ப்பூர்

சாலை நடுவில் மான்; விபத்தில் டாக்சி ஓட்டுநர் காயம்

சிங்கப்பூரின் பரபரப்பான புக்கிட் தீமா விரைவுச் சாலையின் நடுவில் நேற்று காட்டு மான் ஒன்று அமர்ந் திருப்பதைக் கண்டு வாகன மோட்டிகள் பலர் அதிர்ச்சியடைந் தனர். அதன் மீது மோதுவதைத் தவிர்க்க வாகனமோட்டிகள் முயற்சி செய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத் தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர், காட்டு மான் மீது மோது வதைத் தவிர்க்க பெரும் முயற்சி யில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவரது அருகே வந்து கொண்டிருந்த இரு வாகனங்களும் அவசரமாக நிறுத்தப்பட்டன.

விமான நிலையத்தில் ஓட்டுநர் இல்லா வாகனம் பரிசோதனை

சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக ஓட்டு நர்கள் இல்லாத வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிகிறது. துறைமுகம், பொதுப் போக்கு வரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் ஓட்டுநர்கள் இல்லாத வாகனங் களை அதிகமாக பயன்படுத்த திட்டங்கள் உள்ளன.

விடுமுறை முடிந்து சிங்கப்பூருக்கு திரும்பியபோது விபத்து: தம்பதியர் மரணம்

இரண்டு பிள்ளைகளுடன் மலேசியா சென்றிருந்த தம்பதியர் வெள்ளிக்கிழமை காரில் சிங்கப் பூருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது ஜோகூரில் தங்காக் அருகே கார் விபத்துக்குள்ளாகிவிட்டது. அந்தச் சம்பவத்தில் தம்பதியர் இருவரும் மாண்டுவிட்டனர். சுவா கே லியோங் என்ற 41 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி காரை ஓட்டிச் சென்றார்.

டான் சுவான் ஜின்: தந்தையே வழிகாட்டி

இரண்டாம் உலகப்போரைப் பார்த்து வளர்ந்த தன்னுடைய தந்தை காட் டிய வழியிலேயே தன் வேலை, குடும்பத்தைத் தான் அணுகுவதாக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்து இருக்கிறார். இப்போது தன்னுடைய 16 வயது பையனுடன் மெதுஓட்டம் ஓடும்போது மகன் தன்னை பல தடவை முந்திக்கொண்டு ஓடுவ தாகவும் அதைப் பார்க்கையில் தனக்கு அந்தக் காலம் நினைவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தன் தந்தையுடன் தான் அப் போது மெதுஓட்டம் ஓடியபோது தான் அவரை முந்திக்கொண்டு ஓடியதைப் போலவே இப்போது நடக்கிறது என்று அவர் தெரி வித்தார்.

கொசு ஒழிப்பில் புதிய தொழில்நுட்பம்: 2 மணி நேர வேலை மூன்று நிமிடங்களில்

சிங்கப்பூரில் டெங்கி கொசு பரவலைக் கட்டுப்படுத்த களப்பணி ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆய்வாளர்கள் சொந்தமாக ஏடிஸ் கொசுக் களை உருவாக்குகிறார்கள். அத்தகைய கொசுக்களை உருவாக்கி அவற்றை Wolbachia என்ற பாக்டீரியா கிருமிக்குள் செலுத்துவர். இதன் காரணமாக கொசு இனப்பெருக்கம் தடுக்கப் படுகிறது.

இப்படிச் செய்ய சோதனைச் சாலையில் ஆய்வாளர்கள் பெரும் பாடுபடவேண்டியிருக் கிறது. இந்நிலையில், ஒரின்னோ டெக்னாலஜி என்ற உள்ளூர் நிறுவனம் 2016ல் ஒரு சாதனத்தை உருவாக்கியது. இந்தச் சாதனம் அந்த இரண்டு மணி நேர வேலையை மூன்றே நிமிடங்களில் செய்துவிடும்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆயுதமேந்தி மிரட்டல்; ஆடவர் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மற்றொரு ஓட்டுநரை மிரட்டிய 51 வயது ஓட்டுநர் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டார். மேலும் அவர், அந்த ஓட்டுநரின் வாகனப் பக்கவாட்டுக் கண்ணாடிகளையும் சேதப் படுத்தினார். சம்பவம் பற்றிய தகவல் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்ததற்காகவும் சாலையில் குழப்பத்தை விளைவித்ததற்காகவும் மற்றொரு வரின் உடைமைக்குச் சேதத்தை விளைவித்ததற்காகவும் அவர் கைதானார்.

கேலாங் கொலை: சசிதரன் ராமசாமி மீது குற்றச்சாட்டு

கேலாங் வட்டாரத்தில் தனது சகா ஒருவரின் மரணத்துக்குக் காரண மாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 30 வயது மலேசியரான சசி தரன் ராமசாமி கொலைக் குற் றத்தை எதிர்நோக்குகிறார். 29 வயது மலேசியரான நெல்சன் நாதன் செல்வராஜாவைக் கொலை செய்ததாக நேற்றுக் காலையில் அரசு நீதிமன்றத்தில் சசிதரனுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் காலை 7.17க்கும் 8.18க்கும் நிகழ்ந்த கைகலப்பில் நெல்சன் கொல்லப்பட்டதாக நம்பப் படுகிறது.

வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பான ஆட்கடத்தல் மோசடிச் செயல்கள்; மூன்று புகார்கள்

வெளிநாட்டு மாணவர்கள் தொடர் பான ஆட்கடத்தல் மோசடி குறித்து கடந்த இரண்டு நாட் களில் மூன்று புகார்கள் செய்யப் பட்டுள்ளதாக போலிசார் தெரி வித்துள்ளனர். சிங்கப்பூரில் படித்துக்கொண்டி ருக்கும் வெளிநாட்டு மாணவியிட மிருந்து $22,010 பணமும் மற் றொரு மாணவரிடம் $4,800 பணமும் மோசடி செய்யப்பட்ட தாகக் கூறப்படுகிறது. மோசடிப் பேர்வழிகளுக்காக மின்னிலக்க நாணயங்களை வாங்க அவர்களது பணம் பயன் படுத்தப்பட்டது.

‘மலேசியாவின் கடன் பிரச்சினை பற்றி சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் தெரியும்’

மலேசியாவின் கடன் பிரச்சினை பற்றி சிங்கப்பூரும் சீனாவும் புரிந்துகொண்டுள்ளன என்று மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் இங் தெரிவித்துள்ளார். முன்னைய மலேசிய அரசாங்கத்தின் ஒரு டிரில்லியன் (S$337 பில்லியன்) கடனை அடைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள தற்போதைய அரசாங்கம் நடப்பில் உள்ள சிங்கப்பூர் மற்றும் சீனா சம்பந்தப்பட்ட மாபெரும் ரயில் திட்டங்களை மறுஆய்வு செய்யும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மது முன்னதாகத் தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் சேனல் நியூஸ்ஏ‌ஷியா ஒளிவழிக்குப் பேட்டியளித்த திரு லிம், சிங்கப்பூரும் சீனாவும் மலேசியா வுக்கு உதவ முன்வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கேலாங்கில் ஆடவர் கொலை: 30 வயது மலேசியர் கைதானார்

கேலாங் ரோட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப் பட்டதன் தொடர்பில் 30 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருக் கிறார். பிடிபட்டுள்ளவர் மலேசியர். போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தது. எண் 218 கேலாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 7-.50 மணிக்கு மோதல் நடப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று போலிஸ் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் அசைவின்றி கிடந்தார். அவர் இறந்துவிட்டதாக அதே இடத்தில் மருத்துவர்கள் அறிவித்தனர்.

Pages