You are here

தலையங்கம்

அரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை

ஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல மாநிலங்களாக மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் காடுகள், மலைகள், நதிகள் போன்ற பிளவுபடாத இயற்கை வளங்களை எல்லா மாநிலங்களும் பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றன. வற்றாத ஜீவநதிகளும் குறிப் பிட்ட பருவத்தில் மட்டும் நீர் நிரம்பி ஓடும் ஆறுகளும் அந்த நாட்டில் அதிகம்.

நமது குற்றவியல் நீதி முறையை மேம்படுத்துவோம்

இந்திராணி ராஜா

இந்திராணி ராஜா

நியாயமான, நீதி வழுவாத குற்றவியல் நீதி முறையே நாகரிகமடைந்த சமுதா யத்தின் அடிக்கல். இத்தகைய நீதி முறை வெவ்வேறு நலன்களுக்கு இடையில் சமநிலை காணவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண் டும். அதே சமயத்தில், தண்டனையும் தண்டனை அளிக்கும் நீதி முறையும் நியாயமாக இருக்கவேண்டும். குற் றத்திற்கு இலக்கானவர்களுக்கும் குறை தீர்க்கப்படவேண்டும்.

வன்முறையால் ஏற்பட்ட கறை அகல வேண்டும்

ஞாயிறு 25.3.2018

இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க நாடு தழுவிய அளவில் அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அந் நாட்டிலுள்ள சமூக பிளவின் ஆழத்தை வெளிப்படுத்தியது. 2009ஆம் ஆண்டு முடி வுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பல்லாண்டுகளாக நடைபெற்ற பிரிவினை வாதப் போருக்குப் பின் கடும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

போதைப் பொருள் - ஒரு குடும்பத்தின் அழிவு, ஓரு நாட்டின் சீர்கேடு

அப்துல் கரீம், தலைமை இயக்குநர்,
சிங்கப்பூர் போதைப் பொருள் தடுப்புச் சங்கம்

போதைப் பொருள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடும் என்றால் அது மிகையாகாது. ஒவ்வோர் ஆண்டும் உலகில் பல் லாயிரக்கணக்கான உயிர்கள் போதைப் பொருளுக்குப் பலியாகின்றன. போதைப் பொருள் ஒரு கொடிய நோய்க்குச் சமமானது. இந்தக் கொடிய நோய்க்குத் தீர்வு காணவேண்டும் என்றால் அரசாங்கம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுகூடி செயல்படவேண்டும்.

சட்டம், ஒழுங்கைச் சீரழிக்கும் சிலை உடைப்பு அரசியல்

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிலை களுக்கு மனிதர்களைவிட அதிக மதிப்பு, மரி யாதை, அந்தஸ்து எல்லாம் உண்டு. திராவிடர் கள் அதிகம் வாழ்கின்ற பகுதி என்று வரலாறு எடுத்துக்காட்டும் தமிழ்நாட்டில், ‘நடுகல்’ என்ற ஒரு வழக்கம் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே இருந்துவருகிறது.

எதிர்காலத்திற்குரிய வரவுசெலவுத் திட்டம்

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் பிப்ரவரி 19ஆம் தேதி வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இத்திட்டம் அண்மையில் நாடாளுமன் றத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாண்டின் வரவுசெலவுத் திட் டம் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில், சிங்கப்பூரை ஒரு நல்ல நிலையில் நிறுத்துவதற்கான உத்திபூர்வ, ஒருங் கிணைந்த நிதித் திட்டமாகும். ஆசியா வுக்கு மாறும் உலகளாவியப் பொருளி யல் பாரம், தொழில்நுட்பம், மூப்படையும் மக்கள்தொகை ஆகிய மூன்று பெரும் போக்குகளைக் கருத்தில்கொண்டு திட்டம் வகுக்கப்பட்டது.

நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்தரும் வரவுசெலவுத் திட்டம்

ஒரு நாட்டின் அரசாங்கம் ஆண்டுதோறும் தனது நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யும் வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) என்பது அந்த நாட்டின் வருடாந்திர நிதி அறிக்கை. நடப்பு நிதி ஆண்டில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும்; செலவினம் எவ்வளவு இருக்கும் என்பதை எல்லாம் வரையறுப்பது அந்த அறிக்கைதான்.

இளையர்களே...தொண்டூழியம் புரிய வாருங்களேன்!

கி.ராமமூர்த்தி, தலைவர், மக்கள் கழக நற்பணிப் பேரவை

அண்மையில் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் தங்களின் நாற்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடின. 1977ஆம் ஆண்டில் முதன் முதலில் காலாங் சமூக மன்றத்தில் இந்தியர் கலாசாரக் குழு தொடங்கப்பட்ட இந் திய கலாசாரக் குழு இன்று பல பரி மாணங்களைப் பெற்று இந்தியர் நற்ப ணிச் செயற்குழு என்ற பெயரில் இயங் குகிறது. தற்போது சிங்கப்பூரில் 97 இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்திய பட்ஜெட் - கட்சிக்கும் தேவை, நாட்டுக்கும் அவசியம்

இந்தியாவில் பொதுத்தேர்தல் மூலம் பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கும் எந்த ஓர் அரசாங்கமும் தனது உடனடி அரசியல் முன்னுரிமைகளுக்கும் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சியைச் சாதிக்கத் தான் எடுக்கும் முயற்சிகளுக்கும் இடையில் செம்மையான ஒரு சமநிலையைக் காணவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஆண்டுதோறும் புதிய வரவுசெலவுத் திட்டத் தைத் தாக்கல் செய்துவருகின்றன.

Pages