You are here

வாழ்வும் வளமும்

மொழித்திறன் போட்டிகள்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக் கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவின் ஏற்பாட்டில் டெப்பொ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலய பலநோக்கு மண்டபங்களில் நடத் தப்படவுள்ளன. 28/1/2018, 3/2/2018, 11/2/2018, 24/2/2018, 3/3/2018 , 10/3/2018 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் போட்டிகள் நடைபெறும். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கதை சொல்லும் போட்டி, வாசிப்புப் போட்டி, பாட்டுப்போட்டி ஆகிய போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்

கேம்பல் லேனில் நடைபெற்று வரும் பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக லிஷா அமைப்பும் சிங்கப்பூர் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து பொங்கல் சிறப்புப் பட்டிமன்றத்தை இம்மாதம் 13ம் தேதி மாலை நடத்தின. ‘சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவது ஆண்களே! பெண்களே!!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி பட்டிமன்றத்தை வழிடநடத்தினார். ‘ஆண்களே!’ என்ற அணியில் அழகுநிலா பஞ்சாட்டரம், இரவிச்சந்திரன் சோமு, அகிலா ஹரிஹரன் ஆகியோர் வாதிட்டனர். ‘பெண்களே!!’ என்ற அணியில் இராம்குமார் சந்தானம், திலகராணி, கண்ணன் சேஷாத்ரி ஆகியோர் வாதிட்டனர். ‘பெண்களே!’ என வாதிட்ட அணி வென்றது.

துணைப்பாட வகுப்புகள் ஆரம்பம்

பாலர் பருவம் முதல் உயர்நிலை நான்கு வரை பயிலும் மாணவர் களுக்காக சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடத்தும் துணைப்பாட வகுப்புகள் நாளை முதல் நடைபெற உள்ளன. அதற்கான பதிவு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நாளை பிற்பகல் 2 முதல் 4 மணி வரை நடைபெறும். வகுப்புகள் சனிக் கிழமைகளில் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இருக்கும். மேல் விவரங் களுக்கு திருமதி கமலாதேவியை 96463167 என்ற எண்ணில் அழைக்கலாம்.

138 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி

செட்டியார்கள் கோயில் குழுமத் தின் ஏற்பாட்டில், அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற கல்வி உதவி நிதி வழங்கும் விழாவில் 138 மாணவர்கள் விரு தைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பள்ளிப் பொருட்களை வாங்கவும் அடுத்த ஆண்டு நான் மேலும் சிறப்பாக தேர்ச்சி பெறவும் இந்த உபகாரச் சம்பளம் எனக்கு ஊக்கமளிக்கி றது,” என்றார் ஸிங்ஹுவா தொடக் கப் பள்ளியில் ஐந்தாம் நிலையில் பயிலும் ஜெயஸ்ரீ.

குறுகிய நேர தைப்பூசம்: பக்தர்களிடம் விளக்கம்

முஹம்மது ஃபைரோஸ்

அலகு காவடிகள் குத்துவதற்கான கால அவகாசம், பால்குடம் ஏந்து வோர் ஊர்வலமாகச் செல்ல எடுத் துக்கொள்ளும் நேரம், சந்திர கிர கணம் காரணமாக கோவில்கள் மூடப்படும் நேரம் தொடர்பான பக் தர்களின் ஐயங்களையும் அக்கறை களையும் தீர்க்கும் வண்ணம் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன் னிட்டு இந்து அறக்கட்டளை வாரி யம் விளக்கக் கூட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமையும் நேற் றும் ஏற்பாடு செய்திருந்தது. இம்மாதம் 31ஆம் தேதி தைப் பூசத் திருவிழா சிங்கப்பூரில் நடை பெறவுள்ளது.

கதைக்களத்தில் பொற்கிழிக் கவிஞரின் சிறப்புரை

படம்: எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து படைக்கும் இம்மாதக் கதைக்களம் இன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு 21, கிளவ்செஸ்டர் சாலையில் அமைந்துள்ள பெக் கியோ சமூகமன்றத்தில் நடைபெற உள்ளது. கதைக்களத்தில் சிங்கப்பூர் இலக்கிய, ஆன்மீக ஆர்வலர் களுக்கு நன்கு அறிமுகமான மதுரை பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ. அவர்கள் ‘கதை யில் கவிதை’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார். வரும் பிப்ரவரி மாதம் முதல் பொதுப் பிரிவுக்குத் தொடக்க வரி கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் 300 வார்த்தைகள் எனும் வரம்பில் மாற்றமில்லை.

இலவச மருத்துவ பரிசோதனை

சாங்கி, ஸ்ரீ ராமர் ஆலயம், மவுண்ட் அல்வெர்னியா மருத் துவமனை, C3A, தேசிய சிறுநீரக அறநிறுவனம், சிக்லாப் பல இன, பல சமய நன்னம்பிக்கை வட்டம் இணைந்து வழங்கும் இலவச மருத்துவப் பரிசோதனை இன்று 7ஆம் தேதி ஞாயிறு காலை 8.30 மணி முதல் 11 மணி வரை உடல் எடைக் குறியீடு, ரத்த அழுத்தப் பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும் தினமான ஜனவரி 21ஆம் தேதி, ஞாயிறன்று ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய தமிழ்ப் பேச்சு காலை 10 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும். மேல்விவரங்களுக்கு திரு விஜய்யுடன் 91482343 என்ற எண்கள் வழி தொடர்புகொள்ள லாம்.

சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்

இலங்கை தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீட்டு விழா ஆனந்தபவன் உணவக மாடியில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் நடைபெற் றது. சிங்கப்பூரில் உள்ள கங்கை கொண்டான் கழகமும் கவிமாலை இலக்கிய அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியில் விபுலாநந்த அடி களார் ஆவணப்படத்தின் ஒளி வட்டை முன்னாள் நியமன நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரன் வெளியிட, சிங்கப்பூர் ஹனிஃபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்.

மற்றவர்கள் சாதிக்க உதவும் ஹித்தேஷ்

சுதாஸகி ராமன்

நடப்பது, பேசுவது, ஆடைகள் அணிவது என்று அன்றாடம் மேற் கொள்ளும் எளிய காரியங்களைச் செய்ய சிறு வயதிலிருந்தே சிரமப்பட்ட ஹித்தேஷ் ராம்சந்தானி, 25, இன்று பலருக்கு நம்பிக்கை ஊட்டும் சுடராகத் திகழ்கிறார். பிறந்தது முதல் பெருமூளை வாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட அவர் தமது உடற்குறையினால் பொது இடங்களில் உரையாற்ற அஞ்சினார். பள்ளியில் சக மாணவர்களுக்கு முன்னிலையில் பேச முடியாமல் பலமுறை பதற்றம் அடைந்ததும் உண்டு.

முத்தமிழறிஞர் விபுலானந்த அடிகளார் ஆவணப்படம்

திரு விபுலானந்தர், ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மட்டக் களப்பில் பிறந்தவர். கொழும்பிலும், தமிழ் நாட்டிலும் படித்தவர். சைவ, இஸ்லாமிய, கிறிஸ்துவ சமய ஒற்றுமைக்குப் பாடுபட்டதோடு, எல்லாச் சமயங் களும் சமம் என்ற பார்வையுடைய நல்லிணக்க நாயகர். அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், இலங்கையிலும் பணியாற்றிய முத்தமிழ் அறிஞர் விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாறு, செய்த தமிழ்த் தொண்டு, அரிய கண்டு பிடிப்பு ஆகிய சிறப்புகளை உள்ளடக்கிய 50 நிமிட ஆவணப் படம் ஒன்றை, புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தயாரித்துள் ளார்.

Pages