கட்டடத்தின்மீது சாய்ந்த மரம்; சுமார் 20 வீடுகளில் பாதிப்பு

கட்டடத்தின்மீது சாய்ந்த மரம்; சுமார் 20 வீடுகளில் பாதிப்பு

1 mins read
dd2a99c2-7061-4f6a-aea4-3fadc125d752
-

பழைய ஏர்போர்ட் ரோட்டுக்கு அருகில் ஜாலான் டுவாவில் சுமார் எட்டு மாடி உயரம் அளவிலான மரம் ஒன்று வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பு மீது சாய்ந்தது. நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்தப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த மரம் விழுந்ததாகக் கூறப் பட்டது. மரின் பரேட் நகர மன்றத்தின் பேச்சாளார் ஒருவர் இந்தச் சம்பவம் ஜாலான் டுவாவின் புளோக் 97க்கு அருகில் நேர்ந்ததாகக் குறிப்பிட்டார். அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் எட்டாவது மாடி வரை சுமார் 20 வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சில வீடுகளின் சன்னல்கள், குளிர்சாதனப் பெட்டி ஆகியவை பாதிக்கப்பட்டன. அந்த புளோக்கின் கீழ் இருந்த கூடாரம் ஒன்றும் மரம் விழுந்ததில் பெருஞ் சேதத்துக்குட்பட்டது. அந்த புளோக்கின் ஆறாவது மாடியில் இருந்த ஒரு வீட்டின் சன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. அந்த புளோக்கில் குடியிருக்கும் 64 வயதான ஒருவர் அதிகாலை 5 மணியளவில் சன்னலிலிருந்து பலத்த சத்தம் கேட்டதாக சீன நாளிதழ் லியன்ஹ வான்பாவ்விடம் சொன்னார்.