பிகேஆர் கட்சியில் இருந்து பிரிந்த ரஃபிசிக்கு வாழ்வளிக்கும் மலேசிய ஐக்கிய கட்சி

பிகேஆர் கட்சியில் இருந்து பிரிந்த ரஃபிசிக்கு வாழ்வளிக்கும் மலேசிய ஐக்கிய கட்சி

1 mins read
867a19ad-cab9-434c-bb02-fcf6c4adb5a5
ஆறு அதிருப்தி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி (நீலநிறச் சட்டை). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் பொருளியல் அமைச்சரான ரஃபிசி ரம்லிக்கு பழைய கட்சி ஒன்று புது வாழ்வு அளிக்கிறது.

மலேசியாவை ஆளும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அவர் அக்கட்சியிலிருந்து பிரிந்த பிறகு மலேசியா பெர்சாமா கட்சி என்று அழைக்கப்படும் மலேசிய ஐக்கிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அந்தக் கட்சி பினாங்கில் பதிவு செய்யப்பட்ட சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சீனர் சங்கத்தின் ஒரு பிரிவாகும். அக்கட்சியின் நிறுவனரான டான் ஜின் தியாம், கட்சியை ரஃபிசியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

2025 மே மாதம் நடந்த கட்சித் தேர்தலில் தோல்வியடைந்த ரஃபிசியும் நிக் நஸ்மியும் அமைச்சரவையிலிருந்து விலகினர்.

கட்சி ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பிகேஆர் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் ஆறு பேர் பங்கேற்றனர். வோங் சென், லீ சியான் சுங், திருவாட்டி ரோட்ஸியா இஸ்மாயில், எஸ். கேசவன். ஸஹிர் ஹசன், பக்டியர் வான் சிக் ஆகியோர் அவர்கள்.

உட்கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியை இழந்த பிறகு ரஃபிசி, பிகேஆர் தலைவரான திரு அன்வார் இப்ராகிமின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். திரு நிக் நஸ்மியும் தனது துணைத் தலைவர் பொறுப்பை தற்காத்துக் கொள்ளத் தவறிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்