42 பற்களுடன் உலக சாதனை படைத்த பிரதாப் முனியாண்டி

42 பற்களுடன் உலக சாதனை படைத்த பிரதாப் முனியாண்டி

1 mins read
7cd01b13-8ae6-4e11-8073-95d61daf5749
மார்ச் 5ஆம் தேதியன்று கின்னஸ் உலகச் சாதனைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதாப் முனியாண்டி தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 581,000க்கும் அதிகமான பார்வைகளையும், 19,000 விருப்பங்களையும் இது பெற்றுள்ளது. - படங்கள்: கின்னஸ் உலகச் சாதனை/ஃபேஸ்புக்

சாதாரண மனிதர்களைவிட 10 பற்கள் அதிகமாகக் கொண்டுள்ளார் மலேசியரான 33 வயது பொறியாளர் பிரதாப் முனியாண்டி. அவருக்கு மொத்தம் 42 பற்கள் உள்ளன.

‘ஆக அதிக பற்களைக் கொண்ட ஆண்’ என்ற கின்னஸ் உலகச் சாதனைப் பட்டத்தை இவர் 2023ஆம் ஆண்டில் வென்றார்.

மார்ச் 5ஆம் தேதியன்று கின்னஸ் உலகச் சாதனைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இவரது காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 581,000க்கும் அதிகமான பார்வைகளையும், 19,000 விருப்பங்களையும் இது பெற்றுள்ளது.

சாதாரண மனிதர்களை விட 10 பற்கள் அதிகம்

அந்தக் காணொளிகளில் மருத்துவக் கையுறைகளை அணிந்த ஒருவர் பிரதாப்பின் பற்களை ஒவ்வொன்றாக எண்ணுவதைக் காணலாம். வழக்கமாக மனிதர்களுக்கு ஒரு வரிசை பற்கள் மட்டுமே இருக்கும் இடத்தில், பிரதாப்பிற்கு அந்த வரிசைக்குப் பின்னால் சில பற்கள் மறைந்திருப்பதை அந்தக் காணொளி காட்டுகிறது.

இதைப் பார்த்த இணையவாசிகள் பலர் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

பிரதாப்பின் பற்கள் அனைத்தும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதாக இணையவாசி ஒருவர் பாராட்டினார்.

சாதனை குறித்து பிரதாப் முனியாண்டி நெகிழ்ச்சி

உலகிலேயே அதிக பற்களைக் கொண்டிருப்பவர் என்ற சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையாகவும் சிறப்பாகவும் உணர்கிறேன். எனது வாய்வழி சுகாதாரத்தை மிகச் சிறப்பாகப் பராமரித்த பல்மருத்துவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதாப் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தற்போது பெண்களுக்கான பிரிவில், 38 பற்களுடன் இந்தியாவைச் சேர்ந்த கல்பனா பாலன் உலகச் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்