சிறுவர் சுவைக்க சித்திரங்களுடன் சிங்கப்பூரின் கதை

சிறுவர் சுவைக்க சித்திரங்களுடன் சிங்கப்பூரின் கதை

2 mins read
4e8659fd-b77d-4bae-a38d-eb576ddb629b
‘வண்டர்பாட் அண்ட் டைம்-டிராவலிங் கேப்சுல்’ என்ற /சிறுவர்களுக்கான நூல் மார்ச் 14ஆம் தேதி சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகத்தில் வெளியீடு கண்டது. - படம்: சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம்

சிங்கப்பூரின் வரலாற்றையும் மரபையும் சுவையோடு எடுத்துச் சொல்லும் நூல் ‘வண்டர்பாட் அண்ட் டைம்-டிராவலிங் கேப்சுல்’ (Wonderbot and the Time-Travelling Capsule).

சிறார்களுக்காக முதல்முறையாக சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. 

இந்த நூலை உள்ளூர் எழுத்தாளர் குவெக் ஹொங் ஷின் எழுதியுள்ளார். ஓவியங்களையும் அவரே வரைந்துள்ளார்.

சிங்கப்பூரின் வரலாற்றைச் சொல்லும் சித்திர நூல்.
சிங்கப்பூரின் வரலாற்றைச் சொல்லும் சித்திர நூல். - படம்: சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம்

துருதுருவென இருக்கும் களோவியும் காலங்களைத் தாண்டி பயணம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்ற அவளுடைய இயந்திர நண்பர் வண்டர்பாட்டும் இந்த நூலின் நாயகர்கள்.

இருவரும் காலச்சக்ரத்தில் சிங்கப்பூரின் தொடக்க காலத்துக்கு பயணம் செய்கிறார்கள். அவர்கள் நிகழ்காலத்திற்குத் திரும்புகிறார்களா என்பதே கதை.

இருவரும் 1950களின் குப்பையும்கூளமுமாக இருந்த சிங்கப்பூர் ஆற்றையும் நெரிசலான ஈரச்சந்தையையும் முதலில் காண்கின்றனர்.

பின்னர், 1980களுக்குப் பயணம் செய்து, தூய்மையான சிங்கப்பூர் ஆற்றையும் நவீன உணவு மையத்தையும் கண்டு வியக்கின்றனர். நாட்டின் தொடக்ககால குடியேறிகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

களோவியின் கதையின் வழியாக, சிங்கப்பூர் 1950களில் எப்படி இருந்து என்பதையும் நாட்டின் வளர்ச்சியில் சில குறிப்பிடத்தக்க தருணங்களையும் அறிந்துகொள்ளலாம். 

உதாரணத்திற்கு, அசுத்தமாக இருந்த சிங்கப்பூர் ஆறு எவ்வாறு அழகாக மாறியது, ஒரு பூங்கா நகரமாக சிங்கப்பூரின் உருமாற்றம், சிங்கப்பூரின் கலாசாரம் உட்பட பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

மார்ச் 14ஆம் தேதி சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகத்தில் நடந்த நூல் வெளியீட்டின்போது, நூல் வாசிப்பு அங்கமும் இடம்பெற்றது. 

நூல் வாசிப்பு அமர்வில், சைகை மொழி மூலமும் கதை பகிரப்பட்டது.
நூல் வாசிப்பு அமர்வில், சைகை மொழி மூலமும் கதை பகிரப்பட்டது. - படம்: சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம்

சிறார்கள் கதையை நன்கு புரிந்துகொள்ள, உரையாடல்கள் மூலமும் நடவடிக்கைகள் மூலமும் வாசிப்பு அங்கம் இடம்பெற்றது. 

சிறுவர்களுக்குச் சைகை மொழியைப் பற்றியும் செவிப்புலன் இல்லாதோர் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த சைகை மொழியிலும் கதை சொல்லப்பட்டது.

காலப்பெட்டகம்  செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிள்ளைகளும் அவர்களது அம்மாவும்.
காலப்பெட்டகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிள்ளைகளும் அவர்களது அம்மாவும். - படம்: சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம்

பெற்றோரும் பிள்ளைகளும் ஒரு காலப் பெட்டகத்தை (time capsule) இணைந்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ‘சிறிய அளவில் தொடங்கி பெரிய கனவு காண்போம்’ திட்டத்தின் கீழ், ஏறக்குறைய 1,800 பாலர் பள்ளிகளுக்கு இந்நூலின் பெரிய பதிப்பும் ஆசிரியர் கையேடுகள் வழங்கப்படவுள்ளன.

வரும் 2027ஆம் ஆண்டு முதல், தொடக்கநிலை மாணவர்களுக்காக இந்த நூல் உயிரோவியக் காணொளியாக (animated video) வெளியிடப்பட உள்ளது.

இந்த நூலை சிறுவர் அரும்பொருளகத்தில் $16.90க்கு வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்