அறிவோம் அறிவியல் உண்மைகள்

அறிவோம் அறிவியல் உண்மைகள்

3 mins read
மனித உடல், விலங்குகள், பூமி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
52fd7db2-c58f-49a0-b424-bd416088b7f1
அறிவியல் பார்வையில் பூமி, சுழலும் விந்தைகளும் ஆச்சரியமூட்டும் உண்மைகளும். - படம்: செயற்கை நுண்ணறிவு

மனித உடல் பற்றிய உண்மைகள்

இதுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு கணினியையும் விட உங்கள் மூளை மிகவும் சக்தி வாய்ந்தது, புத்தி கூர்மையானது.

உணவு சாப்பிட்டு முடித்ததும் சீஸ் (பாலாடைக்கட்டி) சாப்பிடுவது உங்கள் வாயில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்கி, பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

மனித மூக்கினால் ஏறக்குறைய 10,000 வெவ்வேறு வாசனைத் திரவியங்களைக் கண்டறிய முடியும்.

கைரேகையை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் ‘டாக்டிலோஸ்கோபி’ (Dactyloscopy) என்று அழைக்கப்படுகிறது.

எலும்புகள் பற்றிய அறிவியல் உண்மைகள்

உடலின் மிகச்சிறிய எலும்பு, காதின் உட்பகுதியில் இருக்கும் ‘ஸ்டிரப்’ (Stirrup) ஆகும். இது ஒரு அரிசி நெல்லின் அளவுதான் இருக்கும்.

மனிதர்களுக்கு 206 எலும்புகள் உள்ளன!

மனித பாதம் 26 எலும்புகளைக் கொண்டுள்ளது.

மனித கையில் (மணிக்கட்டு உட்பட) 54 எலும்புகள் உள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மனித உடலின் மிக வலுவான எலும்பு, தொடை எலும்பு ஆகும்.

மனித எலும்புக்கூட்டின் மிகச்சிறிய, இலகுவான எலும்பு நடுசெவியில் காணப்படும் ‘ஸ்டேப்ஸ்’ ஆகும்.

விலங்குகள் பற்றிய உண்மைகள்

ஆப்பிரிக்க யானையின் காதுகள் 6 அடி நீளம் வரை இருக்கக்கூடும்.

ஆக்சோலோட்ல்ஸ் (Axolotls) என்பது ஒரு வகை நீர்வாழ் உயிரினம். தங்கள் இழந்த உடல் உறுப்புகளை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் திறன் கொண்டவை.

நேக்கட் மோல் எலி.
நேக்கட் மோல் எலி. - படம்: சயின்ஸ்-ஸ்பார்க்ஸ்.காம்

நேக்கட் மோல் எலி (Naked Mole Rats) 30 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இதுவே மிக நீண்ட காலம் வாழும் கொறித்து உண்ணும் (Rodent) விலங்காகும். இவற்றின் முன் பற்கள் ஒன்றை ஒன்று சாராமல் தனித்தனியாக நகரக்கூடியவை.

டரான்டுலா (Tarantula) சிலந்திகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் தோலை உரித்து, உடலின் உள் உறுப்புகளையும் புதுப்பித்துக் கொள்கின்றன.

பிளாட்டிபஸ் (Platypus) என்பது முட்டையிடும் ஒரு பாலூட்டி விலங்காகும்.

[ο] பஃபர் மீன்களின் (Pufferfish) பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

பஃபர் மீன்.
பஃபர் மீன். - படம்: சயின்ஸ்-ஸ்பார்க்ஸ்.காம்

ஹம்மிங் பறவைகளால் (Hummingbirds) மட்டுமே பின்னோக்கி பறக்க முடியும்.

ஆடுகளுக்கு செவ்வக வடிவத்தில் கண்மணிகள் (Pupils) உள்ளன.

கிரிஸ்லி கரடிகளால் (Grizzly bears) மணிக்கு 30 மைல் வேகம் வரை ஓட முடியும்

அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் தேள்களைக் காண முடியும்.

பனிப்பிரதேச கரடிகளுக்கு (Polar bears) இயற்கையான எதிரிகள் யாரும் இல்லை.

கொமோடோ டிராகன்.
கொமோடோ டிராகன். - படம்: சயின்ஸ்-ஸ்பார்க்ஸ்.காம்

கொமோடோ டிராகன்கள் (Komodo dragons) 3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை.

ஈமு பறவை 1.9 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

பொன்வண்டுகள் (Ladybirds) உண்மையில் வண்டு (Beetles) வகையைச் சேர்ந்தவை.

துருவக் கரடிகளுக்கு கருப்பு நிற தோல் உள்ளது.

பல்லிகள் தங்களின் நாக்கைப் பயன்படுத்தி வாசனையை உணர்கின்றன. சில பல்லிகள், வேட்டையாடும் விலங்குகள் தங்களைத் தாக்கும்போது தங்களின் வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

புவி அறிவியல் உண்மைகள்

பெருங்கடல்கள் சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை உலகம் முழுவதும் பரப்ப உதவுகின்றன.

உலகின் மிகப்பெரிய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.

ஆர்டிக் (Arctic) ஒரு கண்டம் அல்ல, அண்டார்டிகா (Antarctica) ஒரு கண்டம் ஆகும்.

பூமி தன் அச்சில் ஒரு முறை சுழலுவதற்கு 23 மணி நேரம், 56 நிமிடங்கள் மற்றும் 4 வினாடிகள் ஆகும்.

உலக அதிசய பாவ்பேப் மரம்

பாவ்பேப் மரம்(Baobab Tree) ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் போன்ற வறண்ட பகுதிகளில் வளரக்கூடியது.

இது உலகிலேயே மிகவும் விசித்திரமான மரங்களில் ஒன்றாகும்.

இந்த அதிசய மரங்கள் 1,000 முதல் 3,000 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.

இலைகள் இல்லாதபோது இதன் கிளைகள் வானத்தை நோக்கிய வேர்கள் போலக் காட்சியளிக்கும்.

இதனால் இது ‘தலைகீழ் மரம்’ (Upside-Down Tree) என்று அழைக்கப்படுகிறது.

இதன் தடிமனான தண்டுப் பகுதி ஒரு பெரிய நீர்த்தேக்கம் போலச் செயல்படுகிறது.

வறட்சிக் காலத்திற்காக இது தன் தண்டில் 100,000 லிட்டர் வரை நீரைச் சேமிக்கும்.

வறண்ட பாலைவனத்தில் தாகம் தீர்ப்பதால் இது “வாழ்க்கையின் மரம்” எனப்படுகிறது.

இந்த மரத்தின் உட்பகுதி வயதாகும்போது இயற்கையாகவே பொந்தாக (Hollow) மாறும்.

இதன் தண்டுப் பகுதி மனிதர்கள் தங்கும் அளவுக்குப் பிரம்மாண்டமானது.

ஆப்பிரிக்காவில் இம்மரத்தின் உள்ளே தானியக் கிடங்குகளும், சிறிய உணவகங்களும் அமைந்துள்ளன.

இதன் உள்ளே ஒரே நேரத்தில் 50 பேர் வரை தாராளமாக நிற்க முடியும்.

இதன் பழங்கள் பெரிய தேங்காய் அல்லது சுரைக்காய் வடிவத்தில் இருக்கும்.

இப்பழத்தில் ஆரஞ்சைவிட 6 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது.

இதன் ஊட்டச்சத்து மிக்க இலைகளை மக்கள் சமைத்து உண்கிறார்கள்.

இதன் நார்ப்பகுதியான பட்டைகள் கயிறுகள், ஆடைகள் செய்ய உதவுகின்றன.

புவி வெப்பமயமாதல், தீவிர வறட்சியால் இம்மரங்கள் தற்போது அழிந்து வருகின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த பழமையான பல மரங்கள் திடீரெனச் சரிவது கவலைக்குரியது.

பாவ்பேப் மரங்கள் 32 ஆப்பிரிக்க நாடுகளில் வளர்கின்றன. இவை 30 மீட்டர் உயரம் வரையிலும் 50 மீட்டர் பிரம்மாண்ட சுற்றளவு வரையிலும் வளரக்கூடியவை. பாவ்பேப் மரங்கள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தங்குமிடம், உணவு, தண்ணீரை வழங்கக்கூடியவைப. புவி வெப்பமயமாதல், தீவிர வறட்சியால் இம்மரங்கள் தற்போது அழிந்து வருகின்றன.
பாவ்பேப் மரங்கள் 32 ஆப்பிரிக்க நாடுகளில் வளர்கின்றன. இவை 30 மீட்டர் உயரம் வரையிலும் 50 மீட்டர் பிரம்மாண்ட சுற்றளவு வரையிலும் வளரக்கூடியவை. பாவ்பேப் மரங்கள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தங்குமிடம், உணவு, தண்ணீரை வழங்கக்கூடியவைப. புவி வெப்பமயமாதல், தீவிர வறட்சியால் இம்மரங்கள் தற்போது அழிந்து வருகின்றன. - படம்: ரெட்டிட்
குறிப்புச் சொற்கள்
அறிவியல்செயற்கை நுண்ணறிவுகணினிஉடல்நலம்விலங்கு