அறிவியல் அறிவோம்! : எலும்புகள்

அறிவியல் அறிவோம்! : எலும்புகள்

1 mins read
5e985212-52f7-4dda-a2be-9929d6a20fbb
பிறக்கும்பொழுது ஒருவர் உடம்பில் ஏறத்தாழ மொத்தம் 300 எலும்புகள் இருக்கும். வளர்ந்தபின் கிட்டதட்ட 206 எலும்புகள் உள்ளன. - படம்: ஃபிரீபிக்
Google News Preferred Icon

நம் உடலின் செயல்பாடுகளில் எலும்புகள் இன்றியமையாத ஓர் அங்கத்தை வகிக்கின்றன. உடல் உறுப்புகளுக்கு ஓர் அரணாக விளங்கி பாதுகாப்பதோடு, அவை உடலுக்கு வலிமையையும் சேர்க்கின்றன. 

உடம்பில் எத்தனை எலும்புகள் உள்ளன?

ஒவ்வொரு குழந்தை பிறக்கும்பொழுது, அதன் உடம்பில் ஏறத்தாழ மொத்தம் 300 எலும்புகள் இருக்கும்.

சில காலத்திற்குப் பிறகு, சில எலும்புகள் ஒன்றுசேர்ந்துவிடும். இதனால், வளர்ந்த பிறகு, மொத்த எலும்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கிட்டத்தட்ட 206 எலும்புகள் உடம்பில் இருக்கும்!

உடம்பில் மிகச் சிறிய எலும்பு எது?

-

மிகச் சிறிய எலும்பு நம் காதில் உள்ளது. காதின் உள் பகுதியில், மொத்தம் மூன்று எலும்புகள் உள்ளன. வெளிக்காதிலிருந்து உள் காதிற்கு ஒலி அனுப்புவதே இம்மூன்று எலும்புகளின் வேலையாகும்.

நம் உடம்பின் மிகப் பெரிய எலும்பு நம் கால்களில் உள்ளது. இந்த எலும்பு இடுப்பையும் முட்டியையும் இணைக்கிறது.

எலும்புகளுக்கு எவ்வாறு வலிமைச் சேர்ப்பது?

- படம்: ஷட்டர் ஸ்டாக்

அதிக கால்சியம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பால், பாலாடைக்கட்டி, கீரை வகைகள் போன்ற உணவுகளில் கால்சியம் அதிகளவில் காணப்படுகின்றது. உடற்பயிற்சியை மேற்கொள்வதும் அவசியம்!

எலும்புகள் உடைந்தால் என்ன செய்வது?

- படம்: ஷட்டர்

எலும்புகள் முறியலாம். ஆனால், பெரும்பாலான தருணங்களில், எலும்புகள் தாமாகவே தங்களைச் சீரமைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவை. இருந்தாலும், எலும்பு முறிந்தால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது!

குறிப்புச் சொற்கள்
அறிவியல்மாணவர் முரசுமனித உறுப்புஉடல்நலம்

தொடர்புடைய செய்திகள்