நானும் என் கனவும்!

பீக்கன் தொடக்கப்பள்ளி

நானும் என் கனவும்!

2 mins read
cb54f06d-9d70-4892-b845-80397f8f414d
தங்கள் லட்சியம் குறித்துப் பகிர்ந்த தொடக்கநிலை 3ல் பயிலும் பீக்கன் தொடக்கப்பள்ளி மாணவர்கள். - படங்கள்:பீக்கன் தொடக்கப்பள்ளி
Google News Preferred Icon

செந்தில்குமார் தனுஷ், தொடக்கநிலை 3

செந்தில்குமார் தனு‌ஷ்.
செந்தில்குமார் தனு‌ஷ். - படம்: பீக்கன் தொடக்கப்பள்ளி

என் கனவு ஒரு கணித ஆசிரியராவது.கணித கேள்விகளுக்கான தீர்வுகளைக் காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மாணவர்களுக்குக் கணிதத்தை எளிதாகக் கற்றுக்கொடுக்க நான் விரும்புகிறேன். 7986x6=47916 போன்ற கணித கேள்வியை எளிமையாக நான் விளக்குவேன். என் மாணவர்கள் கற்றுக்கொள்வதைப் பார்த்து நான் மகிழ்வேன். என் கனவை அடைய கடினமாகப் படிப்பேன்.

தமிழ்வானன் ஷான்வி, தொடக்கநிலை 3

தமிழ்வானன் ‌‌‌ஷான்வி.
தமிழ்வானன் ‌‌‌ஷான்வி. - படம்: பீக்கன் தொடக்கப்பள்ளி

எனக்கு உயரிய கனவு உண்டு. அது நான் ஒரு சிறந்த மருத்துவராக மக்களுக்குச் சேவை செய்வதே ஆகும். நான் ஒரு மருத்துவரானால், ஏழை நேயாளிகளுக்குக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகச் சிகிச்சை அளிப்பேன். நோய் வராமல் தடுக்க சுகாதார முறைகளைப் பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வை நான் ஏற்படுத்துவேன். நான் ஒரு சிறந்த மருத்துவராகி சமுதாயத்திற்குப் பெருமை சேர்ப்பேன்.

கீர்த்திதர்ஷினி ஜெயகுமார், தொடக்கநிலை 3

கீர்த்திதர்ஷினி ஜெயகுமார்.
கீர்த்திதர்ஷினி ஜெயகுமார். - படம்: பீக்கன் தொடக்கப்பள்ளி

என் கனவு சிறந்த தோட்டக்கலை நிபுணராக வேண்டும் என்பதுதான். நான் மலர்களையும் செடிகளையும் பராமரிக்க மிகவும் விரும்புகிறேன். தினமும் தண்ணீர் ஊற்றி அவற்றை வளர்க்க நான் ஆவலாக இருக்கிறேன். அழகான பூக்கள் மலர்வதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்காலத்தில் நான் பராமரிக்கும் தோட்டம் பசுமையாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டும். அனைவரும் திரண்டு வந்து அந்தத் தோட்டத்தைக் கண்டு மகிழவேண்டும்.

ப்ரிஷா தாலியா ராஜ், தொடக்கநிலை 3

ப்ரிஷா தாலியா ராஜ்.
ப்ரிஷா தாலியா ராஜ். - படம்: பீக்கன் தொடக்கப்பள்ளி

ஒரு பிரபலமான நடனமனியாவதே என் கனவு. பாரம்பரிய இந்திய நடனங்களின் அழகையும் நளினத்தையும் நான் மிகவும் ரசிக்கிறேன். இந்த நடனம் என்னை என்பது கலாசாரத்துடன் இணைக்கிறது. வண்ணமயமான உடைகளும் கதை சொல்லும் நடன அசைவுகளும் எனக்குப் பிடிக்கும். நான் மேடையில் நடனமாடி மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்க விரும்புகிறேன். இந்திய நடனக் கலைஞராக இருந்து என் ஆர்வத்தை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்கனவுஆசிரியர்மருத்துவர்